Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

மரம் நடலாம் வாங்க...

சென்னையை பசுமையான நகரமாக்க சென்னை சமூக சேவை தொண்டுநிறுவனம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கிவருகிறது.

98940 62532 - இந்த எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதும், அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு என்ன வகையான மரக்கன்று வேண்டுமோ அதை வீட்டிலேயே கொண்டுவந்து தருகிறார்கள்.

1. யாணை குண்டுமணி
2. மே பூ
3. ஏழிலைப்பணை
4. புன்னை
5. கொய்யா
6. பாதாம்
7. பூவரசம்
8. இலுப்பை
9. மகிழம்
10.குங்குமம்

உங்களிடம் மரக்கன்று நட இடம் உள்ளதா?

உடனே SMS செய்யுங்கள் - 98940 62532.




மரம் நடுவோம் மழை பெறுவோம்

இதுக்கு பேர்தான் சாலை மறியலா???

சாலை மறியல்னா ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து தான் செய்கிறார்கள். ஆனால் இப்போ இத சிலர் ஃபேஷனா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நேத்து தி.நகர் போலாம்னு போனப்போ மேற்கு மாம்பலம் கிட்ட வரிசையா பேருந்து, வண்டி எல்லாம் நிப்பாட்டிட்டாங்க.

என்னமோ கும்பலா இருக்காங்களே என்னனு தெரியலையேனு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒருத்தர் "ஏதோ சாலை மறியலாம்" அப்படினார். எப்படிங்க சொல்றீங்க அப்படினேன். ஆக்ஸிடெண்டா இருந்தா இந்நேரம் ஆம்புலன்ஸ் வந்திருக்கும்ல.. என்று என்னை ஒரு லுக் விட்டார். சரி நமக்கு ஏன் வம்புனு, நானும் கருமமே கண்ணா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

கூட்டத்த பாத்தது ஆஹா பெரிய மறியல் போல நாம இன்னிக்கு தி.நகர் போனமாதிரிதான்னு நினைச்சேன். அப்போதான் ஒரு போலிஸ்காரார் வேகமா வந்தார். கூட்டத்துக்குள்ள போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளில வந்து போன் போட்டு பேசினார் (இங்கன நிறைய பேர் இருக்காங்க வாங்கடா நல்லா கும்மிட்டு போலாம்னு சொல்லிருப்பார் போல).

கொஞ்ச நேரத்துல 4/5 போலிஸ் கைல லத்தியோட வந்தாங்க. அவங்கள திரும்பி பாத்துட்டு திரும்பினா இங்க மறியல் பண்றோம்னு சொன்னதுல ஒரு 10 பேர் தான் இருக்கானுவ. மீதி எவனையும் காணோம். என்னடானு கேட்டா இவங்க மட்டும் தான் சாலை மறியல் பண்றவங்களாம். மீதி எல்லாம் வேடிக்கை பாக்க வந்தாங்களாம்.

வந்த போலிஸ்காரங்க அங்க போய் மக்கள்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி (தமிழ் சினிமால அப்படிதான செய்யுராங்க) அவங்கள கலைஞ்சு போக சொல்வாங்கனு நினைச்சேன். ஆனா போனவங்க, ஆளுக்கு 2 பேரை தள்ளி பிடிச்சுகிட்டாங்க. இன்னொருத்தர் போக்குவரத்தை சீர்படுத்தி விட்டுட்டார்.

இவ்ளோதான் அவங்க சாலை மறியல்.

அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. :(