இதுக்கு பேர்தான் சாலை மறியலா???

சாலை மறியல்னா ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து தான் செய்கிறார்கள். ஆனால் இப்போ இத சிலர் ஃபேஷனா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நேத்து தி.நகர் போலாம்னு போனப்போ மேற்கு மாம்பலம் கிட்ட வரிசையா பேருந்து, வண்டி எல்லாம் நிப்பாட்டிட்டாங்க.

என்னமோ கும்பலா இருக்காங்களே என்னனு தெரியலையேனு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒருத்தர் "ஏதோ சாலை மறியலாம்" அப்படினார். எப்படிங்க சொல்றீங்க அப்படினேன். ஆக்ஸிடெண்டா இருந்தா இந்நேரம் ஆம்புலன்ஸ் வந்திருக்கும்ல.. என்று என்னை ஒரு லுக் விட்டார். சரி நமக்கு ஏன் வம்புனு, நானும் கருமமே கண்ணா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

கூட்டத்த பாத்தது ஆஹா பெரிய மறியல் போல நாம இன்னிக்கு தி.நகர் போனமாதிரிதான்னு நினைச்சேன். அப்போதான் ஒரு போலிஸ்காரார் வேகமா வந்தார். கூட்டத்துக்குள்ள போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளில வந்து போன் போட்டு பேசினார் (இங்கன நிறைய பேர் இருக்காங்க வாங்கடா நல்லா கும்மிட்டு போலாம்னு சொல்லிருப்பார் போல).

கொஞ்ச நேரத்துல 4/5 போலிஸ் கைல லத்தியோட வந்தாங்க. அவங்கள திரும்பி பாத்துட்டு திரும்பினா இங்க மறியல் பண்றோம்னு சொன்னதுல ஒரு 10 பேர் தான் இருக்கானுவ. மீதி எவனையும் காணோம். என்னடானு கேட்டா இவங்க மட்டும் தான் சாலை மறியல் பண்றவங்களாம். மீதி எல்லாம் வேடிக்கை பாக்க வந்தாங்களாம்.

வந்த போலிஸ்காரங்க அங்க போய் மக்கள்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி (தமிழ் சினிமால அப்படிதான செய்யுராங்க) அவங்கள கலைஞ்சு போக சொல்வாங்கனு நினைச்சேன். ஆனா போனவங்க, ஆளுக்கு 2 பேரை தள்ளி பிடிச்சுகிட்டாங்க. இன்னொருத்தர் போக்குவரத்தை சீர்படுத்தி விட்டுட்டார்.

இவ்ளோதான் அவங்க சாலை மறியல்.

அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. :(

7 நனைந்தவர்கள்:

G3 said...

மீ தி ஃபர்ஸ்ட்???

மங்களூர் சிவா said...

me the second??

Vijay said...

\\அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. \\
தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற சாலை மறியல் தான் செய்யணுமா? இவங்க பண்ணுற மறியலினால் எவ்வளவு பேர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எங்கள் ஊரில் ஒரு தடவை சாலை மறியல் நடந்ததால் என்னால் ஒரு செமஸ்டர் பரீட்சை எழுத முடியாமப் போச்சு. மொத்தம் 34 பேர் அன்னிக்கு பரீட்சை எழுதவில்லை. இதையெல்லாம் இந்தியாவிலே தடை செய்தால் நல்லது.

ரசிகன் said...

//
அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. :( //

இது சரிதான். ஆனாலும் ஏதோ தனிக் குழு பிரட்சனைக்கு மொத்த பொதுமக்களையும் தொந்தரவு செய்வது சரியாக படலை:)

ரசிகன் said...

யார் வேணும்னாலும் இப்படி சாலை மறியல் அது இதுன்னு நடத்தறது,பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது இதையெல்லாம் கட்டுப்படுத்த கடின வழிகள் தான் தேவை:)

பொடிப்பொண்ணு said...

ஏற்கனவே தி நகரில் நெரிசல் . இதுல கரெக்டா அங்க மறியல் பண்ணுராங்கலாமாம் !

பொடிப்பொண்ணு said...

//திரும்பி பாத்துட்டு திரும்பினா இங்க மறியல் பண்றோம்னு சொன்னதுல ஒரு 10 பேர் தான் இருக்கானுவ//

அடப்பாவி அடப்பாவி !!!!! :) :)