பில்லா 2007
பழைய கதை தான் என்றாலும் புதிய விதமாக திரைக்கதையை அமைத்ததில் அசத்தி இருக்கிறார்கள். பழைய பில்லாவில் இருந்த "தேங்காய் சீனிவாசன்" கேரக்டர் மிஸ்சிங் என்றாலும் பெரிய வித்தியாசம் எதும் இல்லை. கதைகளம் முழுவதும் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பிரமாண்டமாய் இருக்கிறது.
அஜீத் பிரமாண்டத்திற்கு கரெக்டாக பொருந்தியிருக்கிறார். நமீதாவை மிஞ்சும் முயற்சியில் நயன் வெற்றி பெறுகிறார். போலிஸாக பிரபு அந்த அளவுக்கு பொருத்தமாக இல்லை என்றே சொல்லலாம். சில இடங்களில் போலிஸா என்பதை மறந்தது போல் வசனங்கள்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் கலக்கியிருக்கிறார். கேமரா கோணங்களும், படமாக்கப்பட்ட விதமும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். இதைபார்க்கும்போது ஷங்கரின் சில படங்கள் பிரமாண்டம் என்று வந்துள்ளதில் என்ன பிரமாண்டம் என்ற கேள்வியே எஞ்சுகிறது. செலவு செய்ததை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் இயக்குனர்.
படத்தில் ஒரிஜினல் பில்லா சாகும் வரை வசனங்கள் குறைவு, விறுவிறுப்பு அதிகம். அதன்பின் சிறிது விலகி, வேலு, சந்தானம் கலகலக்க வைக்கின்றனர். "அவரு ஆறு தல, நான் ஒரே தல" போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். இவை பில்லா என்ற கெத்தில் இருந்து விலகி எப்போதும் போன்ற சாதாரண படமாகவே காட்டுகின்றன. இவ்வளவு செய்தவர்கள் பாடல்களுக்கு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
கடைசி 15 நிமிடத்தில் சிறிது சலிப்பு ஏற்படுகிறது என்றாலும் படத்தின் பிரமாண்டம், அஜீத் நடிப்பு, நயந்தாராஆஆஆ என படம் வெற்றி படம் தான்.
என்ன ஒரே ஒரு குறை நயன்தாராவுக்கு ஒரு சண்டைகாட்சி வைத்திருக்கலாம்.
4 நனைந்தவர்கள்:
//என்ன ஒரே ஒரு குறை நயன்தாராவுக்கு ஒரு சண்டைகாட்சி வைத்திருக்கலாம்.//
Ama, nayan-kkum nameethavukkuma sandai vachi iruntha sooper-a irunthu irukkum.. :-)
வாங்க அனானி.
அதுவும் நல்லாத்தான் இருக்கும், ஆனா நான் அதை சொல்லலைங்க.
நயன பார்த்து இப்பவே வாய பிளந்தாச்சு.
இன்னும் சண்டை வேற வைக்கனுமா?
நீ ஒருத்தன் தான்யா படத்தோட விமர்சனம் போட்டு இருக்க...
நல்லா இரு...
நான் நயன் படத்தை சொன்னேன்.
Post a Comment