மூங்கில் நெல்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை. மூங்கில் நெல் அப்படி ஒரு செய்திய தினத்தந்தில படிச்சபிறகு தான் அதை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

நம்ம ஊர் கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குதுனு படிச்சிட்டு அங்க போய் பார்க்காம இருக்கமுடியுமா?. அதிலிருந்து நெல் கிடைக்குதுனு படிக்கவும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. அதான் பொங்கலுக்கு ஊருக்கு போறப்ப கண்டிப்பா போய் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டுதான் போயிருந்தேன்.

கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது. முன்பு சென்றிருந்த போது மலைக்கு மேலே செல்லும் சாலையின் இருபக்கத்திலும் வளர்ந்து நேராக, உயரமாக நின்ற மரங்கள் இப்போது பூத்து வளைந்து நிற்பது மிகவும் அழகாக உள்ளது.

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள். 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். இப்போதுதான் பூத்துள்ளது, இன்னும் ஒரு மாதம் ஆகும் காய்த்து விழுவதற்கு என்றார்கள்.



மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது.





கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சோதனைசாவடியில் கேட்டபோது, இங்கு மலையில் அடிப்பகுதியில் மட்டும் தான் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன. இங்கு உள்ளவை 1960 க்கு பின் நடப்பட்டவை, இப்போது முற்றி பூத்துள்ளன. இத்தோடு இதன் ஆயுட்காலம் முடிகிறது. காய்த்த பின் இந்த மரங்கள் காய்ந்துவிடும். இவற்றை வெட்டிவிடுவார்கள் என சியாம் சுந்தர் கூறினார்.

28 நனைந்தவர்கள்:

Unknown said...

நானும் பாத்திருக்கேன் மூங்கில் நெல்லை. வாசனை நல்லாயிருக்கும்

படங்கள் அருமை

பதிவும் சூப்பர்.

வாழ்த்துக்கள் ஜெயா

அனுசுயா said...

அருமையான விசயம் மற்றும் படங்கள். இவ்வளவு அழகாக படம் எடுத்து கொடுத்ததற்கு நன்றி.

வவ்வால் said...

மூங்கில் நெல்லைப்பற்றி சங்க இலக்கியத்திலேயே உண்டு, பாரி வள்ளல் ஆண்ட "பிறான் மலை "மலைப்பகுதியில் மூங்கில் அதிகம் இருக்குமாம் , மூவேந்தர்கள் பாரியின் மீது படை எடுத்து முற்றுகை இட்டப்போது பல காலமாய் வெர்றிப்பெற முடியவில்லை, அப்போது அங்கு வந்த கபிலர் பாரியை எத்தனை காலம் முற்றுகை இட்டாலும் தோற்கடிக்க முடியாது , அவர்கள் உணவுக்கு மூங்கில், தேன், கனிகள் என ஏராளமாய் மலையில் உண்டு என்று சொல்லி புரவலர் போல போய் யாசகமாய் தேசத்தை கேளுங்கள் தருவார் எனப்பாடியுள்ளார்.

எனக்கும் மூங்கில் நெல் எப்படி இருக்கும் என சந்தேகம் நீங்கள் படத்துடன் போட்டு தீர்த்து விட்டீர்கள்.

அதனை உண்மையில் சமைத்து உண்ண முடியுமா?

லக்கிலுக் said...

வித்தியாசமான பதிவு. மூங்கில் நெல்லை பற்றி நானெல்லாம் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. மூங்கிலில் உணவு கூட உண்டென்பது ஆச்சரியமான விஷயம்!

ஜே கே | J K said...

வாங்க தங்கம்.

வாசனையா? காய்ஞ்ச நெல்லுல வாசனை வருமா?

-------

நன்றி அனு.

ஜே கே | J K said...

//வவ்வால் said...

அதனை உண்மையில் சமைத்து உண்ண முடியுமா?//

அங்கிருந்த ஊர் மக்களிடம் கேட்ட போது சமைத்து உண்ணலாம் என்று தான் கூறினார்கள்.

இப்போதுதான் பூவாக உள்ளது. ஒரு மாத கழித்து சென்றிருந்தால் நெல் இருந்திருக்கும். சமைத்து பார்த்திருக்கலாம்.

ஜே கே | J K said...

//லக்கிலுக் said...
வித்தியாசமான பதிவு. மூங்கில் நெல்லை பற்றி நானெல்லாம் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. மூங்கிலில் உணவு கூட உண்டென்பது ஆச்சரியமான விஷயம்!//

நானும் இதையெல்லாம் கேள்விப்பட்டதேயில்லை. தற்செயலாக தினத்தந்தியில் படித்ததனால் பார்க்க சென்றேன்.

Anonymous said...

படங்களும்,அதற்கான செய்திகளும் அருமையாக இருக்கிறது.இதுவரை நான் கேள்விபட்டதில்லை.மூங்கில் நெல் பற்றி ..விளக்கங்களுக்கு நன்றி

kuppusamy said...

நீங்கள் சொல்வது உண்மை.எனது மூலிகைத் தோட்டத்தின் அருகே உள்ள ஓடையோரம் இருந்த மூங்கில் சென்ற ஆண்டு பூத்து நெல் விட்டதால் எல்லாம் காய்ந்து வரண்டு விட்டன. ஆதி வாசிமக்கள் அந்த நெல்லைக் கூட்டி எடுத்துச் சுத்தம் செய்து சமைத்து உண்டார்கள். சுவையாக உள்ளதாம்.அந்த காய்த மூங்கில் பலமற்றது வேறு உபயோகத்திற்கு ஆகாது. 40 ஆண்டுக்குமேல் இருக்கும் என்றார்கள்.நன்றி.
இடம்-வரகம்பாடி, பாலக்காடு மாவட்டம்- கேரளா.

koothanalluran said...

இந்தோனிசியா, தாய்லாந்தில் மூங்கில் நெல்(அரிசி) மிகச் சிறந்த delicacy

ஜே கே | J K said...

நன்றி புதிய மன்னா.

------

//kuppusamy said...
காய்த மூங்கில் பலமற்றது வேறு உபயோகத்திற்கு ஆகாது.//

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

ஜே கே | J K said...

koothanalluran நன்றிங்க.

Anonymous said...

மூங்கில் அரிசியை - புட்டு போல - மூங்கில் குழாயில் வேகவைத்து, எலுமிச்சம்பழச்சாறு + இறால் அவியலோடு - தாய்லாந்தில் செய்கிறார்கள்...அருமை...!!!

KARTHIK said...

நல்ல புகைப்படங்கள்
நல்ல தகவல்

manjoorraja said...

பல வருடங்களுக்கு முன் கூடலூர் பகுதியில் மூங்கில் பூ பூத்திருந்ததை பார்த்திருக்கிறேன்.

நெல்லைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் சாப்பிட்டதில்லை. நல்ல சுவை என்று சொல்ல கேள்வி.

பயனுள்ள பதிவு.

ஜே கே | J K said...

//மஞ்சூர் ராசா said...
பயனுள்ள பதிவு.//

நன்றி அண்ணா.

ஜே கே | J K said...

பகிர்தலுக்கு நன்றிங்க செந்தழல் ரவி.

jeya said...

நல்ல தகவல் , வித்தியாசமான பதிவு,
மூங்கில் நெல் பற்றி விளக்கங்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள் jk

நந்து f/o நிலா said...

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கை தந்திருக்கும்.கொல்லிமலைப்பக்கம் அந்த மாதிரி எதுவும் சொன்னார்களா?

நந்து f/o நிலா said...

மூங்கில் முத்து இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நன்கு விளைந்த மூங்கில் கணுக்களுக்கு இடயில் அபூர்வமாக கிடைக்கும் என்று சொல்வார்கள்.

அது உண்மையா இல்லை நாகமாணிக்கம் மாதிரி கட்டுக்கதையா என்று தெரியவில்லை.

அது பற்றி எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்

நன்றி

கப்பி | Kappi said...

அட புதுசா இருக்கே!! மூங்கில் நெல்லை எடுத்து வை மக்கா...வீட்டுக்கு வரும்போது சமைச்சு போடு :)))

ஜே கே | J K said...

karthik, Jeya - நன்றிங்க.

ஜே கே | J K said...

//நந்து f/o நிலா said...
மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கை தந்திருக்கும்.கொல்லிமலைப்பக்கம் அந்த மாதிரி எதுவும் சொன்னார்களா?//

அப்படி எதுவும் கேள்விபடலைங்களே.
எதுக்கும் அடுத்த முறை போகும் போது கேட்டு பாக்கிறேன்.

//மூங்கில் முத்து இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நன்கு விளைந்த மூங்கில் கணுக்களுக்கு இடயில் அபூர்வமாக கிடைக்கும் என்று சொல்வார்கள்.//

இது வேறயா?

இதயும் கேட்டுட்டா போச்சு...

ஜே கே | J K said...

//கப்பி பய said...
அட புதுசா இருக்கே!! மூங்கில் நெல்லை எடுத்து வை மக்கா...வீட்டுக்கு வரும்போது சமைச்சு போடு :)))//

உனக்கு இல்லாததா, வா மக்கா செஞ்சுட்டா போவுது.

இல்ல இப்பவே செஞ்சு பார்சல் அனுப்பவா?

மழைக்காதலன் said...

இன்று புதிதாக ஒன்று தெரிந்து கொண்டேன்... நன்றி மாப்ளே

Divya said...

அருமையான பதிவு அழகான படங்களுடன்!!

மூங்கில் நெல்லைப்பற்றி பல தகவல்களை தெரிந்துக்கொண்டேன், முதன் முறையாக!!

வின்சென்ட். said...

மிக நல்ல பதிவு. எலி தொல்லை அதிகமாவதால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வடகிழக்கு மாநிலங்களில் சமுதாய சீரழிவுகள் தோன்ற காரணம் இந்த மூங்கில் பூத்ததுதான் என்பது நாம் கண்ட வரலாற்று உண்மை.

ஜே கே | J K said...

நன்றிங்க சார்லஸ் & divya.

-----------

தகவலுக்கு நன்றிங்க வின்செண்ட்.