இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே.....ஹோ....ஓ
தமிழ் வந்து தாயமாடுமே..
ராகத்தின் ஊஞ்சல் நானாடிப் பார்க்கிறேன்
ஒரு கோடி நாட்களை ஒரு நாளில் வாழ்கிறேன்
குயில் தோப்பின் பாடலாகிறேன்..
[ வானம் வாழ்த்த........
நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டுவேன்
தார்சாலைக் கூந்தலில் பூக்கள் சூட்டுவேன்
நீயாக போர்வையாய் பனிமூட்டம் பார்க்கிறேன்
நிலவாக சூரியன் மாறக் கேட்கிறேன்
நான் போடும் மெட்டுக்கு கிளிகள் கவிதை சொல்லும்
சட்டென்று மீனெல்லாம் செதிலைத் தட்டித் துள்ளும்
பூவாசம் சிந்தாமல் காற்றின் கைகள் அள்ளும்
வண்டெல்லாம் கோபத்தில் காவல்நிலையம் செல்லும்
மழைத் தீயில் நானும் வேகிறேன்....ஹோ....ஓ
இசைமூச்சின் ஈரமாகிறேன்..
[வானம் வாழ்த்த.......
கண்ணாடித் தோட்டமாய் பொன்னேரி தோன்றுதே
மின்சார மீன்களாய் ஓடம் நீந்துதே
தாய்நாடு போலவே தேன்கூடு பார்க்கிறேன்
தமிழ்க் காதல் நேரவே பாடித் தீர்க்கிறேன்
நாடெந்தன் தாய்வீடு பாசத்தோடு சொல்வேன்
மரமெல்லாம் என் சொந்தம் என்றே கட்டிக் கொள்வேன்
பேரிக்காய் தோப்புக்குள் முயலை கூட்டிச் செல்வேன்
உன் அத்தான் நானென்றே உறவைச் சொல்லித் தருவேன்
உயிருக்குள் பேதமில்லையே.......ஓ......ஓ
உறவுக்கு ஏது எல்லையே..
[வானம் வாழ்த்த.......
அன்பு குமார்...
உனக்கு மிகவும் பிடித்த பாடல்.
உன் பிறந்த நாளில் உனக்காக....
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
9 நனைந்தவர்கள்:
ஆஹா உங்க பதிவுக்கு முத்த தடவை வர்றேன். வாழ்த்து பதிவு போட்டு இருக்கீங்க. நானும் வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...குமார்.
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நல்லவரே!
குமாரிடம் உங்கள் வாழ்த்துகளை சொல்கிறேன்...
உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்
அருமையான பாட்டு. அழகான இசை.அன்பான வாழ்த்துகள் உங்கள் நண்பர் குமாருக்கு.
நண்பர் குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சுஜாதா பாடியதால் பாடல் அருமையாச்சா இல்ல பாடல் அருமையானது சுஜாதா பாடியதுனாலா?
ரெண்டுமே ஒன்னுதான்னு சொல்றீங்களா?
அது சரி!
சுஜாதா பாடிய, எனக்கு பிடித்த இந்த பாடல் ஒரு நாள் தேன்கிண்ணத்துல நானே போடணும்ன்னு நெனச்சிட்டூ இருந்தேன். நீங்க முந்திட்டீங்க. ஆனாலும் நான் போடுவேன்
உங்கள் நண்பர் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அட நம்ப ஆளுக்கு பிறந்த நாளா? நேத்தே பார்க்காம போயிட்டேனே!
சரி! என்னோட பிலேட்டேட் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க ஜே.கே!
உங்கள் நண்பருக்கு தாமதமான வாழ்த்துகள் :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமார்:)
Post a Comment