கொலைவெறியுடன் ஒரு காலை - குருவி

எப்போதும் போல் சனி இரவு தூங்குவதற்குள் ஞாயிறு காலை ஆகிவிட்டது. 3 மணிக்குதான் உறங்கினேன். 6.30 க்கு நண்பன் எழுந்திருடா என எழுப்பினான். ஏண்டானு கேட்டா, கெளம்பு கெளம்பு படத்துக்கு நேரமாச்சு, சீக்கிரம் கிளம்புடானு மிரட்டல் வேற. என்ன படம்னு சந்தடி சாக்கில் கேக்க "குருவி"-னு சொன்னான். ஆனது ஆயிடுச்சு போய் தான் பாப்போமே (ஓசி டிக்கெட் தான) அப்படினு கிளம்பியாச்சு.

காலைல 7.30 ஷோக்கு அதிகம் வரமாட்டாங்க அப்படினு நினைச்சுட்டு போனா அவனவன் புள்ள குட்டியோட குடும்பமா வந்து ஒக்காந்திருக்காங்க. நீங்க வந்தீங்க சரி அந்த குழந்தைங்க என்னடா பாவம் பன்னுச்சு இப்படி காலைல 7.30 இழுத்துட்டு வந்திருக்கீங்கனு நினைச்சுகிட்டேன். அதுக்குள் நண்பன் வேறு வாடா உள்ள போலாம், படம் ஆரம்பிச்சுடும்னு இழுத்துட்டு போனான்.

இருக்கைய தேடிபுடிச்சு உட்கார்ந்து திரைய பார்த்தா, விஜய் பயங்கரமா கார் ஓட்டிட்டு இருக்கார். என்னடா இப்படி கும்பலா போறாங்களேனு நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது அது ரேஸாமாம். கண்ணுக்கு குளிர்ச்சியா மாளவிகாவ காட்டினாங்க, அதுக்கப்புறம் அது வரவேயில்லை, ஏன்னு தெரியல. நல்லா இருந்தா மறுபடி படத்துல இருக்க மாட்டாங்க போல. :)ரேஸ பத்தி சொல்லாம விட்டுட்டேனே, விஜய் கார் ஓட்டுராரு, அதுவும் புது கார் இல்ல, ரேஸ் காரும் இல்ல, நம்ம ஊரு காய்லாங்கடைல நிக்குமே அந்த ஓட்ட வண்டி. அவரு போற வேகத்துக்கு ஒவ்வொரு பார்ட்டா கழண்டு விழுது. ஒரு கட்டத்துல ஆக்ஸிலரேட்டர் பெடலே கழண்டு கீழ விழுந்துடுச்சு. அப்பாடி முடிஞ்சது கத அப்படினு நினைச்சா அங்கதான் டிவிஸ்ட் வைக்குறாரு நாம்ம இயக்குனர். கார் நிக்கிற கண்டிசனுக்கு போயிடுச்சு, அப்போதான் அது நடந்துச்சு. நம்ம விஜய் இருக்காரே விஜய் (என்னடா பண்ணினார்னு கேக்குறது புரியுது. இருங்க அவசரபடாதீங்க, சொல்றேன்) குனிஞ்சு ஆக்ஸிலரேட்டர் வயர எடுக்குறாரு. காருக்கு எந்த ஊர்லடா ஆக்ஸிலரேட்டர் வயர் இருக்குனு நீங்க என்னைய கேக்ககூடாது ஆமா.

அந்த வயர வாய்ல கடிச்சு இழுத்த இழுப்புல கார் கன்னாபின்னானு போகுது. கடைசில பாத்தா கார் ஒரு ஜம்ப் பண்ணி வந்து நிக்குது, கேட்டா மொதல்ல வந்துடுச்சாமாம். :P. அவ்ளோதான் மாளவிகா ஒரு ஜம்ப் பண்ணி வந்துச்சு, அதோட பாய்பிரண்ட தட்டிவிட்டுட்டு வந்து கிஸ் பண்ணுச்சு, அப்புறம் ஒடனே ஒரு பாட்டுக்கு ஆடுச்சு. அம்புட்டு தேன் அதுக்கப்புறம் அத காணல...அதுக்கப்புறம் படம் என்னனு எல்லாம் கேக்கப்பிடாது. விஜய் குடும்பத்தை காட்டுனாங்க, அப்புறம் ஒடனே கெளம்பி மலேசியா போனாரு (மலேசியா போறத்துக்கு இந்த பாஸ்போர்ட், விசா அப்படினு சொல்லுவாங்களே அதெல்லாம் வேணுமுங்களா). அங்கன வில்லன் கூட ஒரு சண்டை. அப்படியே வில்லன் வீட்டுக்கு போறாரு. அங்க திரிசாவ பாக்குராரு. திரிசா வேற யாரு,(என்னங்க இது கூட தெரியாம இருக்கீங்க) நம்ம வில்லன் தங்கச்சி தான். அவங்களுக்கு விஜய பாத்ததும் காதல் பத்திக்குது. அப்புறம் இந்தியா திரும்பி வராங்க. என்னங்க இது சின்னபுள்ளதனமா கேள்வி கேட்டுகிட்டு, திரிசாவும் கூடத்தான் வர்ராங்க.

முதல் பாதில விஜய் கூடவே ஒட்டிட்டு இருந்த விவேக் இரண்டாவது பாதில காணலை. யாரது படத்துல காமெடி இல்லையானு. ராஸ்கல் பிச்சி புடுவேன் பிச்சி. அப்புறம் ரெண்டாவது பாதில வில்லன் வர்ராரு சண்டை போடுறாங்க. வழக்கம் போல விஜய் ஜெயிக்குறாரு. திரிசாவ கை புடிக்குறாரு. அவங்க அப்பா, ஊர் மக்களை காப்பாத்துராரு. அம்புட்டு தான்.

இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இன்னமும் நீங்க தெரிஞ்சுக்கனும்னு ஆசபட்டீங்கனா நீங்களே போய் பாத்து தெரிஞ்சுக்குங்க/சந்தோசப்படுங்க(?!). :)))

பி.கு:
1. எனக்கு பின்னாடி இருந்த 2 சின்ன பசங்க ஏன்னு தெரியல சிரிச்சுட்டே இருந்தாங்க.
2. குருவினு டைட்டில நல்லா மேச் பண்ணிருக்காங்க.

குருவி விளக்கம்:
மலேசியா-ல இருக்கிறவங்க தமிழ்நாட்ல இருந்து பட்டுசேல, மாம்பழம், சில எல்க்ட்ரானிக்(?!) பொருட்கள் எல்லாம் கேப்பாங்களாம். அத கொண்டு போய் அங்க கொடுத்துட்டு வர்ரவங்க பேர்தான் "குருவி".

எப்படி பட டைட்டில் மேச் ஆயிடுச்சா???. :))))

30 நனைந்தவர்கள்:

G3 said...

Me the pharshtu????

பொன்வண்டு said...

:))))))))))

ஆயில்யன். said...

மீ த ஸெகண்டு :))

ஆயில்யன். said...

// குனிஞ்சு ஆக்ஸிலரேட்டர் வயர எடுக்குறாரு. காருக்கு எந்த ஊர்லடா ஆக்ஸிலரேட்டர் வயர் இருக்குனு //

அனேகமா அது கதாசிரியருக்கு வந்த கன்ப்யூசனா இருந்திருக்கும் சரி எவன் கேட்க போறான்னு விட்டிருப்பாங்க! :)))

ஆயில்யன். said...

//எனக்கு பின்னாடி இருந்த 2 சின்ன பசங்க ஏன்னு தெரியல சிரிச்சுட்டே இருந்தாங்க.
//
அனேகமா உங்களை பார்த்தா இருக்கும்! ( என்ன மனுசன் இந்தளவு சீரியஸா படம் பாக்குறாருன்னு!)

ஆயில்யன். said...

அப்ப நான் இல்லையா மீ த ஸெகண்டு!

ஒவர் டு பொன்வண்டு!

அதென்னங்க வியாழன் வெள்ளின்னா ச்சே இன்னிக்கும் வெட்டிவேலைங்கறீங்க?திங்கள் ஆச்சுன்னா டாண்ணு மீ த ஸெகண்டுக்கு வந்துடுறீங்க :)))))

TBCD said...

அந்த ஆக்சிலேட்டர் காட்சி, உலகத்திலே முதல் முறையாக தமிழ் திரையில் வந்திருக்கிறது...

அதை நான் எப்படி மறந்தேன்..

வேகமாக போக, விஜய் முகத்தை அப்படி திருப்புவார் பாருங்க..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜே கே | J K said...

//G3 said...
Me the pharshtu????//

அதெப்படிங்க இதுக்கு மட்டும் கரெக்டா வர்ரீங்க.

ஜே கே | J K said...

// பொன்வண்டு said...
:))))))))))//

என்னோட கஷ்டத்த படிச்சுட்டு உங்களுக்கு சிரிப்பா இருக்கா.

ஜே கே | J K said...

//ஆயில்யன். said...
// குனிஞ்சு ஆக்ஸிலரேட்டர் வயர எடுக்குறாரு. காருக்கு எந்த ஊர்லடா ஆக்ஸிலரேட்டர் வயர் இருக்குனு //

அனேகமா அது கதாசிரியருக்கு வந்த கன்ப்யூசனா இருந்திருக்கும் சரி எவன் கேட்க போறான்னு விட்டிருப்பாங்க! :)))//

என்னமோ போங்க. அத விஜய் வேற வாயில கடிச்சு இழுப்பாரு பாருங்க.

முடியல...

ஜே கே | J K said...

//ஆயில்யன். said...
//எனக்கு பின்னாடி இருந்த 2 சின்ன பசங்க ஏன்னு தெரியல சிரிச்சுட்டே இருந்தாங்க.
//
அனேகமா உங்களை பார்த்தா இருக்கும்! ( என்ன மனுசன் இந்தளவு சீரியஸா படம் பாக்குறாருன்னு!)//

அப்படியா சொல்றீங்க.
அவ்வ்வ்.

ஜே கே | J K said...

//TBCD said...
அந்த ஆக்சிலேட்டர் காட்சி, உலகத்திலே முதல் முறையாக தமிழ் திரையில் வந்திருக்கிறது...

அதை நான் எப்படி மறந்தேன்..

வேகமாக போக, விஜய் முகத்தை அப்படி திருப்புவார் பாருங்க..//

என்னங்க போங்க எம்மாம்பெரிய மேட்டர் அது, அத போய் மறந்துட்டேனு சொல்றீங்களே...

அந்த கார பத்தி என்னா நெனைக்குறீங்க...

G3 said...

ungaluku thrisha pudikaadha??? avanga photo onnu kooda poda kaanom???

G3 said...

//குருவினு டைட்டில நல்லா மேச் பண்ணிருக்காங்க.//

Idhellam kooda pannuvaangala??? Seri.. edho theriyaathanama match aayirukkum.. freeya vidunga :)

இராம்/Raam said...

ஹய்யோ பாவம்.....

கருப்பன்/Karuppan said...

தியாகச்செம்மல் ஜே.கே வாழ்க!!

ஜே கே | J K said...

//G3 said...
ungaluku thrisha pudikaadha??? avanga photo onnu kooda poda kaanom???//

அப்படியெல்லாம் இல்லீங்கோ.

ஜே கே | J K said...

//இராம்/Raam said...
ஹய்யோ பாவம்.....//

அதான் எச்சரிக்கை பதிவு இது.

ஜே கே | J K said...

//கருப்பன்/Karuppan said...
தியாகச்செம்மல் ஜே.கே வாழ்க!!//

ஆஹா, இதென்னது ....

கப்பி பய said...

maappu..appu balamaa irukum pola :))

கப்பி பய said...

maappu..aappu balamaa irukum pola :))

நந்தா said...

//நம்பிக்கை இழந்துவிடாதீர்கள், விடிவெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகவே இருக்கும் //

இதேதான் உங்களுக்கும். இவங்க எப்பயுமே இப்படித்தான் பாஸ். இதுக்கெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா??? அடுத்து நம்ம தலைவர ஜே.கே.ரித்தீஸ் நடித்த "நாயகன்"படமும், பேரரசு அவரே இயக்கி, கதாநாயகனா நடிச்சு ஒரு படமும் வருதாமாம். அப்படியே சுடச் சுட அதையும் ஒரு விடியற்காலையில போயி பாத்துட்டு வந்து எங்களையெல்லாம் காப்பாத்திடு ராசா....

NewBee said...

//கருப்பன்/Karuppan said...
தியாகச்செம்மல் ஜே.கே வாழ்க!!
//

வழிமொழிகிறேஏஏஏஏஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :D :D

ஆனாலும் உங்களுக்கு மகா, மெகாப் பொறுமைங்க.:)

ஜே கே | J K said...

//கப்பி பய said...
maappu..aappu balamaa irukum pola :))//


avvvv

ஜே கே | J K said...

// நந்தா said...
//நம்பிக்கை இழந்துவிடாதீர்கள், விடிவெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகவே இருக்கும் //

இதேதான் உங்களுக்கும். இவங்க எப்பயுமே இப்படித்தான் பாஸ். இதுக்கெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா??? அடுத்து நம்ம தலைவர ஜே.கே.ரித்தீஸ் நடித்த "நாயகன்"படமும், பேரரசு அவரே இயக்கி, கதாநாயகனா நடிச்சு ஒரு படமும் வருதாமாம். அப்படியே சுடச் சுட அதையும் ஒரு விடியற்காலையில போயி பாத்துட்டு வந்து எங்களையெல்லாம் காப்பாத்திடு ராசா....//

எலேய் நந்தா. நான் உனக்கு எந்த கெடுதலும் பண்ணலையே, அப்படியே எதாவது தெரியாம பண்ணிருந்தாலும் மன்னிச்சிக்கோ. வேனும்னா பக்கத்துல தான் இருக்க, வந்து ரெண்டு அடி கூட அடிச்சிட்டு போ.

அதுக்குக்காக இப்படி எல்லாம் சொல்லாத.

ஜே கே | J K said...

//NewBee said...
//கருப்பன்/Karuppan said...
தியாகச்செம்மல் ஜே.கே வாழ்க!!
//

வழிமொழிகிறேஏஏஏஏஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :D :D

ஆனாலும் உங்களுக்கு மகா, மெகாப் பொறுமைங்க.:)//

மொத தடவ நம்ம பிளாக் பக்கம் வந்திருக்கீங்க, வாங்க வாங்க.

தணிகாசலம் said...

thala padam ivlo kevalamaa vaa irukku?

enna kodumai jk ithu?

Shahul Hameed Adanoorar said...

திரிஷா.... இந்த மாதிரி வேடங்களை அவர் மட்டுமே செய்யமுடியும்.

மங்களூர் சிவா said...

// குனிஞ்சு ஆக்ஸிலரேட்டர் வயர எடுக்குறாரு. காருக்கு எந்த ஊர்லடா ஆக்ஸிலரேட்டர் வயர் இருக்குனு //

அனேகமா அது கதாசிரியருக்கு வந்த கன்ப்யூசனா இருந்திருக்கும் சரி எவன் கேட்க போறான்னு விட்டிருப்பாங்க! :)))

மங்களூர் சிவா said...

//எனக்கு பின்னாடி இருந்த 2 சின்ன பசங்க ஏன்னு தெரியல சிரிச்சுட்டே இருந்தாங்க.
//
அனேகமா உங்களை பார்த்தா இருக்கும்! ( என்ன மனுசன் இந்தளவு சீரியஸா படம் பாக்குறாருன்னு!)