ஜோதிடமும் - தீபாவளியும்

நாம இண்டர்நெட், ஈ-மெயில் அப்படினு எவ்ளோ வேகமா முன்னேறி போயிட்டு இருந்தாலும்
சில விசயங்களில் நம்ம நம்பிக்கைய மாத்திக்க முடியாது. அப்படிதான் ஜோதிடமும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து படிப்பு, தொழில், திருமணம், குழந்தைகள் அப்படினு ஒவ்வொரு கட்டத்திலையும் ஜோதிடம் பார்ப்போம்.

இந்த ஜோதிடம் தனி மனிதர்கள் தவிர்த்து தொழில் தொடங்குவது, வேலைவாய்ப்பு மட்டுமில்லாம ஒரு நாட்டுக்கே கூட ஜோதிடம் உண்டு.

ஒரு சிலர் இத மூடநம்பிக்கை அப்படினு சொன்னாலும் இதை பலர் நம்பிக்கையாதான் நினைக்கிறாங்க. சில சமயங்கள்ல வியாபாரிங்க தங்கள் தொழிலுக்கு இதையே சாதகமா பயன்படுத்தி சில விசயங்கல திரிச்சி விடுறதும் உண்டு.

கொஞ்ச நாளைக்கு(சில வருடம்) முன்பு பச்சை கலர் புடவைல ஒரு புரட்சி நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அதாவது அண்ணன்/தம்பி எல்லோரும் தன் உடன் பிறந்த அக்கா/தங்கை களுக்கு பச்சை கலர் புடவை எடுத்து கொடுக்கனும். இல்லைனா தோஷம், அவங்க(அண்ணன்/தம்பி) உயிர்க்கு ஆபத்துனு கெளப்பி விட்டுட்டாங்க. நாடே பச்ச பச்சனு அல்லோலப்பட்டு போங்க. என் உயிர்தான் போன போயிட்டு போகுதுனு சொன்னாகூட விடமாட்டோம்னு வாங்கிட்டு தன் பாசத்த காட்டின அக்கா தங்கைகள் உண்டு.

அடுத்து இந்த அட்சய திதில தங்கம் வாங்கினா தங்கம் பெருகுமாம். இது யார் கிளப்பி விட்டதுனு தெரியல. இந்த அட்சய திதி அன்னிக்கு கணவனோட பாடு எல்லாம் திண்டாட்டம் தான். சோத்துக்கே காசு இல்லைனாலும் அன்னிக்கு தங்கம் வாங்கியே ஆகனும்னு நிப்பாங்க. வாங்கி கொடுக்கலைனா அப்புறம் சோத்துக்கு திண்டாட்டம் தான் அதனால அவனும் எங்காவதும் கடன வாங்கியாவதும் கடைக்கு கூட்டிட்டு போவான். இங்க காசு கொஞ்சம் தான் இருக்குனு எதாவது சின்னதா வாங்கிகிட்டு கடைய ஒரு ரவுண்டு விட்டு என்னென்ன இருக்குனு பாத்துட்டு வந்துட வேண்டியது. ஒரு மாதத்துக்கு அப்புறம் நான் அன்னிக்கு போனப்போ ஒரு டிசைன் பாத்தேன் அது நல்லா இருந்துச்சி வாங்கிகொடுங்க வாங்கிகொடுங்கனு உசுர எடுக்க வேண்டியது. அவனும் பாவம் எத்தன நாளைக்கு தான் சமாளிக்கிறது. காலைல ஆபிஸ் கெளம்பும் போது ஒரு தடவ சொல்ல வேண்டியது. அப்புறம் மதியம் போன் பண்ணி சொல்ல வேண்டியது. நைட் ஆபிஸ்ல இருந்து வந்ததும் சொல்ல வேண்டியது. பொறுத்து பொறுத்து பார்த்துட்டு முடியலடா இவ தொல்லை அப்படினு எப்படியாவது அத வாங்கி கொடுப்பான். அதுக்கப்புறம் சொல்வாங்க பாருங்க ஒரு டயலாக். அதாங்க "அட்சய திதி அன்னிக்கு தங்கம் வாங்கினா தங்க சேரும்னு" இப்போ பாத்திங்களா மறுபடி தங்கம் வாங்கிட்டோம். அவன நச்சரிச்சு புடுங்கிட்டு வாங்கிட்டோம்னு பேசிட்டு இருப்பாங்க.

அதுல புதுசா இப்போ தீபவளிக்கு ஜோதுடம் பாத்து என்ன கலர் துணி வாங்கலாம்னு சொல்லிருக்காங்க. கீழ இருக்கிற படத்தை கிளிக் பண்ணி படிச்சு பார்த்து பலனை அனுபவிச்சுக்குங்க மக்காஸ்...

4 நனைந்தவர்கள்:

நாமக்கல் சிபி said...

:))

அது சரி!

மழைக்காதலன் said...

மறுபடியும் உன்னோட எழுத்துக்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி... தொடரட்டும்.. உன் கவிதைகளுக்காக காத்திருக்கிறேன்....

G3 said...

Phone pannumbodhu neenga padikkarenn padikkarennu sonnadhu idha thaana???

ஆயில்யன் said...

//அதுல புதுசா இப்போ தீபவளிக்கு ஜோதுடம் பாத்து என்ன கலர் துணி வாங்கலாம்னு சொல்லிருக்காங்க. கீழ இருக்கிற படத்தை கிளிக் பண்ணி படிச்சு பார்த்து பலனை அனுபவிச்சுக்குங்க மக்காஸ்...
///

படிக்கறதும் கஷ்டம் படிச்ச பிறகு வாங்குறதும் கஷ்டம்!

வேணும்னா ஒரு ஹெல்பு பண்ணமுடியுமா? நீங்களே படிச்சுட்டு தம்பிக்கு ஒரு செட் டிரெஸ் பார்சல்பண்ணுங்களேன் :))))