மழையோடு விளையாடி...

நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
கொளுத்தும் வெயிலில்
மழை பெய்தாலும்
நனையவும் வேண்டும் ஒரு மனம்...

'மழை வருது உள்ள போ'
அம்மாவின் குரலுக்கு பின்
வெளியே ஓடி
மண் வாசனையுடன்
முதல் துளியில் நனைந்து...

நின்ற மழையின்
வரும் வெள்ளத்தில் விளையாடி
சேரும் சகதியுமாய் திரும்பி
அம்மாவிடம் அடிவாங்கினாலும்
மழையை வெறுத்திட
நினைக்காத மனம்.


முடியாத தருணங்களிலும்
விழும் மழையை ரசித்து
மகிழ்ச்சி கொண்ட மனம்

கொளுத்தும் வெயிலில்
மழைக்காக வருத்தப்பட்டாலும்
எப்போதாவது பெய்யும் மழையிலும்
நனைந்திட துணிந்ததில்லை மனம்.

பேருந்து நிழற்குடையோ
உயர்ந்து நிற்கும் கட்டிடமோ
அலுவலக கண்ணாடி ஜன்னலோ
எங்கேனும் ஒளிந்து கொள்ளவே ஓடுகிறேன்.
நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
நனைய நினைப்பதில்லை மனம்.

13 நனைந்தவர்கள்:

G3 said...

Me the firstu :)

G3 said...

kavidhai superu :)

ஆயில்யன் said...

ம்ம் மழைக்காலத்தில மழையில நனைஞ்சுக்கிட்டு ஃபீல் பண்றீங்க நான் மழையே பாக்க முடியாம ஃபீல் பண்றேன் !


:)

Tech Shankar said...

Super Poem Dear dude

Tech Shankar said...

Super poem dear dude

A Blog for Edutainment said...

super poem boss

ஜே கே | J K said...

நன்றிங்க G3.

ஜே கே | J K said...

//ஆயில்யன் said...
ம்ம் மழைக்காலத்தில மழையில நனைஞ்சுக்கிட்டு ஃபீல் பண்றீங்க நான் மழையே பாக்க முடியாம ஃபீல் பண்றேன் !//

கவலப்படாதிங்க அங்கயும் மழைபெய்யும் அப்போ ஃபீல் பண்ணலாம்.

ஜே கே | J K said...

//தமிழ்நெஞ்சம் said...
Super Poem Dear dude
//

நன்றி தமிழ்நெஞ்சம் அண்ணே.

ஜியா said...

:)) பரிணாம வளர்ச்சி???

கவிதைச் சாரல் கலக்கல் :))

ஜே கே | J K said...

// ஜி said...
:)) பரிணாம வளர்ச்சி???

கவிதைச் சாரல் கலக்கல் :))//

நன்றி ஜி.

ஆளவந்தான் said...

//மழையிலும்
நனைந்திட துணிந்ததில்லை மனம்.

//

பழைய போஸ்ட் போல.. இருந்தாலும் விடற்தா இல்லா :)))

அட வீட்டுல இருந்தா ஒரு மசாலா டீ சாப்பிட்ட்டு.. லேசா நனையிற மாதிரி மழையில நடங்க.. முழுசா நனைஞ்ச பிறகு.. மழைய விட்டு வரவே மாட்டீங்க

Dhavappudhalvan said...

நானும் நனைந்து கொண்டிருக்கிறேன் சுகமாக. அலாதியானது அதிலிருக்கும் சுகம்.



http://aambalmalar.blogspot.com/