பேருந்தில் நான் ஜன்னலோரம்...
ஜன்னலோர இருக்கை

தழுவிச்செல்லும் தென்றல்...
முன் இருக்கையில்
குழந்தையின் சிரிப்பு...
பின் இருக்கையில்
சுவாரஸ்யமான உரையாடல்...
ரசிக்க முடியவில்லை.
மனதில் உறுத்தலாய்
நடத்துனர் கொடுக்காத
ஐம்பது பைசா சில்லரை...
பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறேன்.
ஐந்து...
பத்து...
இருபது நிமிடங்கள்
வந்த பேருந்தில்
முந்தி ஏறியதில்
ஜன்னலோர இருக்கை!
அருகில் தடியாய் ஒருவன்...
அவன் இடிக்க
நான் இடிக்க
பனிப்போரில்
எங்கள் பயணம்.
இறங்க வேண்டிய இடம்.
திரும்பிப் பார்த்துவிட்டு
இறங்கிப் போகிறேன்.
ஜன்னலோரத்தில் அமர்ந்தும்
புழுக்கமாய் மனதில்...
6 நனைந்தவர்கள்:
சரிதான்! இன்னிக்கு பஸ்ல போனீங்களா?
//நடத்துனர் கொடுக்காத ...//
எனக்கும் இதே அனுபவம்
;)
அப்ப எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கா?
:)))
பேருந்தில் நான் உனக்கு ஜன்னலோரம்.. நல்ல ரம்மியமான பாட்டு.. அது போல இல்லாம நச்சுன்னு பிராக்டிக்கலா இருக்கு வரிகள்..
//சரிதான்! இன்னிக்கு பஸ்ல போனீங்களா? //
தினமும் தான் போறேன். அப்ப பாத்துக்குங்க என்னோட நெலமைய....
அவ்வ்வ்வ்வ்,..
//பேருந்தில் நான் உனக்கு ஜன்னலோரம்.. நல்ல ரம்மியமான பாட்டு.. //
சும்மா ஒரு எபெக்ட் குடுக்கலாம் அப்படினுதான் இந்த தலைப்பு வைத்தேன்.
Post a Comment