சென்னை வலைபதிவர் மாபெரும் மாநாட்டின் தகவல்கள்

சென்ற சனிக்கிழமை மாலை நாமக்கல் சிபி, தேவ், கப்பியார், J K ஆகியோர் பங்கு கொண்ட மாபெரும் வலைபதிவர் மாநாடு சென்னை பெசன்ட் நகர், கடற்கரையில் நடந்தது. சனிக்கிழமை மதியம் அலுவலகம் முடிந்ததும் கிளம்பி திருமங்கலம் சென்று, அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் சிபி அலுவலகம் போய் சேர்ந்தேன். நேரில் பார்த்த்தும் இருவர்க்கும் அப்படியொரு மகிழ்ச்சி. (இருக்காதா பின்ன, ஒரே ஊர்காரங்கல்ல). அலுவலக பதிவேட்டில் கையொப்பம் வாங்கிகொண்டு அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

பின் தேநீர் அருந்தும் போது அவர் ஆரம்பித்த அலைபேசி உரையாடல்(யாருடனோ?...) நான் தேநீர் அருந்திவிட்டு தினத்தந்தி நாளிதழையும் முழுமையாக படித்த பின்பும் நீண்ண்ண்டுகொண்டேயிருந்தது. பின் எனக்கு ஒரு ஐந்து நட்சத்திர மிட்டாய் கொடுத்தார். (அதாங்க 5 star சாக்லெட்).

பிறகு இருவரும் நண்பருடைய வண்டியில் கிளம்பி, சாலையில் இடது ஓஓஓரமாகவே பெசன்ட் நகர் வந்தோம். சர்ச்சுக்கு அருகில் ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு நின்றபோது, கப்பி எதிர்பக்கம் நின்று கொண்டு அலைபேசியில் அழைத்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது தேவ் இருந்து எங்கிருக்கிறீர்கள் என்று அழைப்பு. அவரும் நின்றது எங்களுக்கு எதிர்புறம் தான். பின் நால்வரும் ஒரு சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு தார்சாலையை ஒட்டியுள்ள சுவர்மீது அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

எங்க பேச்சு, வ. வ. ச., மொக்க மற்றும் கும்மி பதிவு, தேவ்வின் கல்லூரி கலாட்டா என்று சுவாரஸ்யமாக சென்றது. அவ்வப்போது தேவ்க்கு திரைப்படத்திற்கு செல்லலாம் என்று நண்பரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது. நாங்கள் இங்கிருக்கும் போது விழியன் அவர்கள் மெரினாவில் இருந்து அலைபேசியில் பேசினார். இந்த மாநாடு அப்படியே 8 மணி வரை தொடர்ந்த்து.

பின் எழுந்து வண்டி இருந்த இடத்திற்கு வந்து கைகுலுக்கிவிட்டு தேவ் கிளம்பிவிட்டார். பின் நாமக்கல் சிபி தனது காதல் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்படியே 8.40 வரை நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பின் நாங்களும் கைகுலுக்கிவிட்டு கிளம்பினோம். 9.15 க்கு என் அறைக்கு வந்துவிட்டு உடல் சூடாக உள்ளது என்று தனிக்க அக்கா மாலா அருந்த சென்றோம். அங்கு அண்ணன் கசிய விட்ட செய்தி அன்று அவருக்கு பிறந்த நாளாம். அப்போதுதான் புரிந்தது எனக்கு மதியம் ஏன் ஐந்து நட்சத்திர மிட்டாய் வழங்கினார் என்று. 11.30 க்கு அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றோம்.

சில சுவாரஸ்யமான சில தகவல்கள்:

1. கப்பியாரிடம் கோவி கண்ணன் சொந்த வேலையாக சென்னை வந்திருப்பதாகவும், நேரில் சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பு ஏற்படாயிற்று.

2. முதலில் கோவி கண்ணன் என்று சொல்லிக்கொண்ட நாமக்கல் சிபி, நான் அவருடைய நண்பர், நாகப்பட்டினம் என்றும் அறிமுகம் செய்து கொண்டது. கடைசியில் தான் உன்மையை கூறினோம். இது தேவ்க்கு முன்பே தெரியும்.

3. நாங்கள் பேசிகொண்டிருந்தபோது எதிரில் வந்து பார்க் செய்யப்பட்ட டிராவல்ஸ் "இண்டிகோ" காரின் உள்ளே நடந்த சென்சார் விசயங்கள்.

4. நாங்கள் சென்ற வண்டியில் "சைடு லாக்" வேலை செய்ய வில்லை. திரும்ப வந்து வண்டியை பார்க்கும் வரை, வண்டி இருக்குமோ இருக்காதோ என்ற பயத்திலேயேதான் இருந்தேன்.

5. "கைகுலுக்கிவிட்டு" என்று போட்டுள்ளது ஏன் என்றால் முக்கியமான சந்திப்புகளின் இறுதியில் கைகுலுக்க வேண்டும் என்று தேவ் கூறினார்.

இப்படி எங்களது சென்னை மாபெரும் வலைபதிவர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

17 நனைந்தவர்கள்:

Anonymous said...

aahaa...asathipputteenga

தேவ் | Dev said...

//நாங்கள் பேசிகொண்டிருந்தபோது எதிரில் வந்து பார்க் செய்யப்பட்ட டிராவல்ஸ் "இண்டிகோ" காரின் உள்ளே நடந்த சென்சார் விசயங்கள்.//

இதைப் பத்தி விரிவானத் தகவல்களை எதிர்பார்த்தா இப்படி பாதியிலே விட்டா என்னய்யா அர்த்தம்

மஞ்சூர் ராசா said...

இது போன்ற ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.(??!!)

மாபெரும் மாநாட்டின் தகவல்கள் என போட்டிருக்கிறதே...
என்ன கொடுமை சரவணா இது?

நாமக்கல் சிபி said...

பரவாயில்லை! நீங்களே போட்டுட்டீங்க!

இல்லாட்டி நான் யோசிச்சு யோசிச்சு எழுத வேண்டியது இருக்கும்!

நாமக்கல் சிபி said...

//நேரில் பார்த்த்தும் இருவர்க்கும் அப்படியொரு மகிழ்ச்சி. (இருக்காதா பின்ன, ஒரே ஊர்காரங்கல்ல).//

உண்மைதான்!

நாமக்கல் சிபி said...

//பின் தேநீர் அருந்தும் போது அவர் ஆரம்பித்த அலைபேசி உரையாடல்(யாருடனோ?...) //

ஏனய்யா இப்படியெல்லாம் பொடி வெக்கிறீர்! படிக்கறவங்கெல்லாம் ஆளாளுக்கு ஒண்ணை நெனச்சிக்குவாங்கல்ல!

அது கஸ்டமர் கால்! போன்லயே பிராப்ளம் சால்வ் பண்ண இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்துகிட்டிருந்தேன்!

நாமக்கல் சிபி said...

//பின் நாமக்கல் சிபி தனது காதல் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்//

அடப் பாவி! இது என்ன புதுக் கதை?

நான் என்னய்யா சொன்னேன்!

ஓ! ஓகே.ஓகே! புரிஞ்சுது!

எஸ்.எஸ்.ஆர் மேட்டாரா?

:))

ரைட்டேய்!

J K said...

நன்றிங்க
rmshankarnarayann.

J K said...

////நாங்கள் பேசிகொண்டிருந்தபோது எதிரில் வந்து பார்க் செய்யப்பட்ட டிராவல்ஸ் "இண்டிகோ" காரின் உள்ளே நடந்த சென்சார் விசயங்கள்.//

இதைப் பத்தி விரிவானத் தகவல்களை எதிர்பார்த்தா இப்படி பாதியிலே விட்டா என்னய்யா அர்த்தம் //

இத பத்தி இன்னும் எழுதலாம். ஆனா சென்சார் போர்டு கட் பண்ற அளவுக்கு போய்ட்டா. அதான் விட்டுட்டேன்.

சரி விடுங்க. அடுத்து இது போல் எங்காவது பாத்தா போட்டோவோட போட்டிரலாம்.

J K said...

//அது கஸ்டமர் கால்! போன்லயே பிராப்ளம் சால்வ் பண்ண இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்துகிட்டிருந்தேன்! //


ம். உண்மையா இருந்தா ஓ. கே...

J K said...

//எஸ்.எஸ்.ஆர் மேட்டாரா?//

சூப்பர்னா...

அத ஒரு பதிவா போடுங்க...

J K said...

//இது போன்ற ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.(??!!)//

இருக்காத பின்ன...

கப்பி பய said...

//இதைப் பத்தி விரிவானத் தகவல்களை எதிர்பார்த்தா இப்படி பாதியிலே விட்டா என்னய்யா அர்த்தம்
//

என்னய்யா அர்த்தம்? என்னய்யா அர்த்தம்? என்னய்யா அர்த்தம் :)))

J K said...

//என்னய்யா அர்த்தம்? என்னய்யா அர்த்தம்? என்னய்யா அர்த்தம் :))) //

அத பத்தி நெனைக்கும்போதே இப்படினா, அத நான் எழுதி, எல்லாரும் படிச்சா என்னென்ன ஆகுமோ? அதான் விட்டுட்டேன்.

கோவி.கண்ணன் said...

//சில சுவாரஸ்யமான சில தகவல்கள்:

1. கப்பியாரிடம் கோவி கண்ணன் சொந்த வேலையாக சென்னை வந்திருப்பதாகவும், நேரில் சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பு ஏற்படாயிற்று.

2. முதலில் கோவி கண்ணன் என்று சொல்லிக்கொண்ட நாமக்கல் சிபி, நான் அவருடைய நண்பர், நாகப்பட்டினம் என்றும் அறிமுகம் செய்து கொண்டது. கடைசியில் தான் உன்மையை கூறினோம். இது தேவ்க்கு முன்பே தெரியும்.//

பொட்டீக்கடை சத்தியா சிங்கை வந்த போது அமுகவினர் வடுவூர் குமாரை ஒருவருக்கு விடாது கருப்பு என்று அறிமுகப்படுத்தினார்கள்.

குமார் விழுந்து விழுந்து சிரித்தார்.

கப்பியார் இவ்வளவு பெரிய ஏமாளியா ?

:)))

J K said...

என்ன பண்ண.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் காரணம்...

(இனி புதியவர்கள் யாரையும் சீக்கிரம் கப்பியார் நம்ப மாட்டார் என நினைக்கிறேன்)

dhavappudhalvan said...

JK மாபெரும் மாநாட்டின் செய்திகள் சிந்திக்க வைக்கிறது. வலைப்பதிவின் விரிவு என்ன என்பது.

aambalmalar.blogspot.com ஐயும் பார்வையிடுங்களேன்.கருத்துக்களை கொட்ட அழைப்பிது உங்களுக்கும்.....