தோழி

நீ

எங்கிருந்தோ வருகிறாய்.

பார்த்த வழியிலேயே

உன்மேல்பாசம்கொண்டு

வருகிறேன்உன்னோடு...

வாழ்க்கையின் திருப்பத்தில்

இடறி விழுகிறேன்.

எழுந்து பார்க்கிறேன்

உன் மனதிலிருந்து...என்

வாழ்க்கையில்

எங்கெங்கும் நீ வேண்டும்.

பயணத்தில் சக பயணியாய்

பாதையில் எதிர் வருபவராக

தோள் கொடுக்கும் தோழனாக

கொண்டாடிய தருணங்களாக

பகிர்ந்துகொண்ட சோகமாக

வாழ்வின் பரிபூரணமாய்

எங்கெங்கும்

உனைத் தேடுகிறேன்.

வேறெதுவும் இல்லாது

பிரியமான தோழியாய் மட்டுமே!...

6 நனைந்தவர்கள்:

பூச்சி said...

அருமை.

நாமக்கல் சிபி said...

அருமையான கவிதை ஜே.கே!

நன்று!

Anonymous said...

super ngo..

கமல் ராஜன்.பா said...

வாழ்க்கையின் திருப்பத்தில்

இடறி விழுகிறேன்.

எழுந்து பார்க்கிறேன்

உன் மனதிலிருந்து...

நல்ல வரிகள்.. கலக்கல் ஜெயா..

Anonymous said...

//பிரியமான தோழியாய் மட்டுமே!...//

நல்ல உணர்வு

நல்ல கவிதையும் கூட

வாழ்த்துக்கள்

J K said...

நன்றி அனைவருக்கும்...