பதிவர் பட்டறை


சென்னை வலைபதிவர் பட்டறை ஆகஸ்ட் 5, நண்பர்கள் தினத்தில் நன்றாக நடந்தது. கலந்து கொண்டவர்கள், கலந்துகொள்ள முடியாதவர்கள் என பல நண்பர்கள் கடந்த 50 நாடகளாக அயராது உழைத்துள்ளனர்.

பெரிய அளவில் எதையும் செய்யாத போதும் 'சாட்'டில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த பல நண்பர்களை நேரில் சந்திக்க பெரிய வாய்ப்பாக அமைந்தது. புதிதாக வந்தவர்கள் மெயில் ஐடி துவங்குவது முதல் பதிவு எழுதுவது வரை அதிக ஆர்வம் காட்டினார்கள்.

நான் மேலே கணினி அறையில் இருந்ததால் அங்கே நடந்த சில நிகழ்வுகள்:

முதல் நாள், சனிக்கிழமை மாலை 4.30 க்கு அங்கு செல்வதற்கு முன்பாகவே சிவக்குமார், வினையூக்கி, ஜெயா, லக்கிலுக், மற்றும் சில சென்னை பலகலைகழக ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கிருந்தனர். சிறிது நேரத்தில் கணினிகள் வந்தவுடன் மா.சி என்னையும், வினையூக்கியையும் மேல்தளத்திலிருந்து கவனித்துக்கொள்ள சொன்னார். அதற்கு முன்பே SIFY நிறுவனத்தினர் அங்கு வந்து இணைய வசதிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். பின் கணினி கொண்டுவந்தவர்களுடன் இணைந்து எல்லா கணினிகளையும் மேல் தளத்திற்கு எடுத்து சென்றோம். அங்கு வகுப்பில் இருந்த இருக்கைகளை கணினி வைக்க வசதியா மாற்றி அமைத்தோம். பின் தான் தெரிந்தது, கணிகளுக்கு மின்சாரம் கொடுக்க வச்தியாக Extension Boxes எதுவும் இல்லை.

அப்போது விக்கியும் வந்திருந்தார். பிறகு அவர் தன் நண்பரிடம் கேட்க, நந்தா சென்று எடுத்து வந்து 8 மணிக்கு கொடுத்தார். அதற்குள் அருள் தன் அலுவலகத்திலிருந்து காப்பி இயந்திரம் எடுத்து வந்திருந்தார். அதற்குள் சுந்தருடன் இணைந்து சில பேனர்களை ஒட்டினோம். Extension Boxes வருவதற்குள் கணினிகளை எடுத்து வரிசைப்படுத்தி வைத்திருந்தனர், அதனை பராமறிக்க வந்திருந்தவர்கள். பின் கணினிகளை இணைத்து ஆன் செய்தால் பல கணினிகள் ஆன் ஆகவில்லை. இனையமும் சரிவர இயங்கவில்லை. பின் ஒவ்வொன்றாக சரி செய்யவேண்டியதாயிற்று.

அப்போதும் Extension Boxes பத்தாத்தால் ஒரு கணினியை சரிபார்த்து, அதை ஆஃப் பண்ணிவிட்டு, வயரை எடுத்து அடுத்த கணினியில் சொறுகி அதை சரி செய்ய வேண்டும். ஒன்னு சிஸ்டம் பூட்டே ஆகாது, இல்லைனா நெட் கனெக்ட் ஆகாது. இப்படியே ஒவ்வொரு சிஸ்டமா செக் பண்னுவதற்குள் போதுமென்றாகிவிட்டது.

மணி 9.30 க்கு மேல் ஆக, காலையில் சீக்கிரம் வர வேண்டுமே என்று ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சென்றவுடன் நானும் கணினி கொண்டுவந்தவரும் சரி செய்து கொண்டிருந்தோம். 3 கணினிகளைத் தவிர எல்லா கணினிகளையும் சரி செய்துவிட்டோம். ஒரு கணினிக்கு வேறொன்று நாளை கொண்டுவருகிறேன் என்றார், மற்ற இரண்டை காலையில் சரி செய்து விடுகிறேன் என்றார். சரி என்று அவர் கிளம்பிய உடன் கீழே ஆடிட்டோரியம், மேலே இருந்த கணினி அறைகளை பூட்டிவிட்டு கிளம்பினேன். பல்கலைகழக பாதுகாவலர் வந்து கோர்ட்டில் சீல் வைப்பார்களே அதுபோல ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு, அதை பூட்டில் ஒட்டிய பின்பு தான் என்னை கிளம்ப விட்டர். இதை நாளை காலை அந்த கண்ணாடி போட்டவர்(மா.சி யை) வந்தால் தான் திறப்போம் என்றார்.

ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது. பின் எதுவும் பிரச்சனை இல்லாமல் சென்றது. அவ்வப்போது வகுப்புகளில் ஏற்பட்ட கணினி பிரச்சனை, இணைய பிரச்சனையை வந்திருந்த பராமறிபாளர்கள் விரைவாக சரி செய்து நல்ல முறையில் நடைபெற மிகவும் உதவி செய்தார்கள்.

பட்டறையில் சில:

பலர் எப்படி இ-கலப்பையை இன்ஸ்டால் பண்ண வேண்டும், அதை பயன்படுத்தி எப்படி தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் கேட்டு தெரிந்துகொண்டனர்.

எப்படி மெயில் அக்கவுண்ட் திறக்க வேண்டும், எப்படி புதிதாக பிளாக் எப்படி நிறுவ வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டனர்.
சில பதிவர்கள் தங்களுடைய பதிவுகளில் இருந்த ஐயங்களை கேட்டு தெளிவு படுத்திகொண்டனர்.

அங்கிருந்தவர்களை அதிகம் கவர்ந்தது, சங்கத்து ஆட்கள் அனைவரும் ஒரே மாதிரி உடையில் வந்தது. பின் அதென்னங்க "வ. வா. ச." என்று கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.

என்னிடம் அட்டை இல்லாததால், ஒருவர் "நீங்களும் கலந்துகொள்ள வந்திருக்கீங்களா?" என்ற போது, இல்லீங்க, நான் ஏற்கனவே பதிவு எழுதுகிறேன், இங்கே சொல்லிதர வந்தேன், என்றேன். அதற்கு அவர் நம்பாதது போல் உங்க பதிவு முகவரி சொல்லுங்க என்றார். நான் என் பதிவை காட்டிய பின்பும் கூட அவர் பார்த்த பார்வை என்னை நம்பவில்லை என்று தெரிந்தது.

இவை எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது, அங்கு கணினிகளை பராமரிக்க மற்றும் இணையத்தை சீர்படுத்த SIFY-ல் இருந்து வந்திருந்த நண்பர்கள், விழா முடியும் வேளையில், எப்படிங்க தமிழில் எழுதுவது, எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்று கேட்டதுதான்.

மேலும் பலர் பொதுவாக கேட்டது, எங்களுக்கு சந்தேகம் வந்தா எப்படி உங்கள கேக்கிறது என்பதுதான்.

எல்லாம் முடிந்து கிளம்பிய விட்டோம், பின் அங்கே பல உதவிகளை செய்த குமார் என்பவருக்கு நன்றி சொல்ல அலைபேசியில் அழைத்த போது, "ரொம்ப நன்றிங்க, ரொம்ப நல்லாயிருந்தது, கூடிய சீக்கிரம் நாங்களும் பதிவு எழுதுறோம், எழுதிட்டு சொல்கிறோம்" என்று முகவரியும் வாங்கிக்கொண்டார்.

பல புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

பட்டறை பலருக்கு பலவித எண்ணங்களை விதைத்திருந்தாலும், நமக்கும் சில விசயங்களை தெளிவு படுத்தியுள்ளது.

அடுத்த பட்டறை கணினிகளை வைத்து வகுப்புகள் இருந்தால் எப்படி அமைக்க வேண்டும் என்ற நல்ல தெளிவு கிடைத்துள்ளது.
மேலும் வந்திருந்தவர்களை அதிகம் கவர்ந்தது சங்கத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான உடையில் வந்ததே!.

11 நனைந்தவர்கள்:

வினையூக்கி said...

:) :)

Voice on Wings said...

உங்கள் பார்வையிலிருந்து, நீங்கள் நிர்வகித்த பொறுப்புகளை மையப்படுத்தி அளித்த இந்த விவரிப்பு நன்றாக உள்ளது. புகைப்படங்களைச் சேர்க்காததற்கு நன்றி :)

நாமக்கல் சிபி said...

நல்ல தொகுப்பு ஜே.கே!

நன்றி!

ரவிசங்கர் said...

//
இவை எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது, அங்கு கணினிகளை பராமரிக்க மற்றும் இணையத்தை சீர்படுத்த SIFY-ல் இருந்து வந்திருந்த நண்பர்கள், விழா முடியும் வேளையில், எப்படிங்க தமிழில் எழுதுவது, எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்று கேட்டதுதான்./

super

கப்பி பய said...

சிறப்பாக விவரித்திருக்கிறீர்கள் JK! வாழ்த்துக்கள்!!

J K said...

நன்றிங்க வினையூக்கி அண்ணா.

J K said...

வாங்க Voice on Wings.

உண்மைய சொல்லனும்னா என்னிடம் புகைப்படம் எதுவும் இல்லை. அதான் போடலை.

J K said...

நன்றிங்க சிபி அண்ணா.

வாங்க ரவிசங்கர்.

கடைசில அவங்க கேட்டதுதான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

J K said...

நன்றிங்க கப்பி சார்.

மங்களூர் சிவா said...

ஓ ப்ளாக் ஆரம்பிக்க முன்ன இப்டியெல்லாம் பட்டறை அட்டெண்ட் பன்னனுமா?

எனக்கு தெரியாம போச்சே? இப்ப என்ன பன்றது?
:-))))))

OSAI Chella said...

ஆமா நான் வந்திருந்தேன் உங்கள் புஅகைப்படம் இல்லாததால் பார்த்தேனா என்று தெரியவில்லை. சந்தித்தோமா?