உன் நினைவு...


ஆம்!
கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...

விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.

தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...

இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....

11 நனைந்தவர்கள்:

இசக்கிமுத்து said...

அந்த பாடல் எதுவென்று கூறவில்லையே??

J K said...

வாங்க இசக்கி...

வீடியோவே போட்டாச்சு பாருங்க...

நாமக்கல் சிபி said...

சரி! சரி!

புரியுது தம்பி புரியுது!

சீக்கிரமே சமாதானப் படுத்தும் வழியைப் பாரூ!

காதலிலே ஊடலெல்லாம் சாதா'ரணம்'!
அந்த ஊடலிலே காணும் சுகம் ஓராயி'ரம்'!

குசும்பன் said...

முதலில் கவிதை சூப்பர்:)))

"விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.""

யார் அந்த டாக்டர் அவ்வளோ பெரிய மாத்திரை கொடுத்தது...

குசும்பன் said...

நாமக்கல் சிபி said...
"காதலிலே ஊடலெல்லாம் சாதா'ரணம்'!
அந்த ஊடலிலே காணும் சுகம் ஓராயி'ரம்'!

ரணத்துக்கு ரம் மருந்தா?

J K said...

சரிங்க சிபி அண்ணா.

அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கனும்..

J K said...

நன்றிங்க குசும்பன்...

//ரணத்துக்கு ரம் மருந்தா? //

இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்கப்படாது...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. இங்க பார்றா.. இங்கே ஒருத்தர் கவுஜ எழுதுறாரு!!! அப்போ நாம் எஸ்கேப்புதான்.. :-(

J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அட.. இங்க பார்றா.. இங்கே ஒருத்தர் கவுஜ எழுதுறாரு!!! அப்போ நாம் எஸ்கேப்புதான்.. :-(//

அட பயப்படாதீங்க...

இதுக்கே பயந்தா எப்படி?

padma said...

மிகவும் நன்றாய் வந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
பத்மா........

உதயதேவன் said...

தூரத்து வானம்
தொலைவின் கடல்
பக்கத்து பச்சை
காதில் பாயும் இசை
இவை எதிலும்
பதியவில்லை கவனம்...
மூடிய இமைக்குள்ளும்
முட்டி மோதும்
உன் பிம்பம்!
மூளையின் ஒவ்வொரு
மடிப்பிலும் எதிரொ(லி)ளிக்கும்
உன் நினைவு...
----------
உங்கள் நிலற்படம் எனக்கு சொன்னது...
----------