குண்டாவது எப்படி???....


குண்டாவது எப்படி???....

நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது நல்லா குண்டா இருந்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் இளைத்து சரியான அளவு இருந்தேன்.

அப்படியே கல்லூரி நாட்களிலும் தொடர்ந்ததால் எந்த கவலையும் இல்லை. ஆனா என்னிக்கு சென்னை வந்து ஓட்டலில் சாப்பிட ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா மெலிய ஆரம்பிச்சுடுச்சு உடம்பு. எனக்கு அப்படியே இருப்பது போல தான் தெரியுது.

ஆனா ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது, ஏண்டா இப்படி ஆயிட்ட என்று கேட்கிறார்கள். இப்படி எல்லாரும் ஊருக்கு போகும்போதும் கேக்கிறதால டென்சன் தான் ஆகுது. இப்படிதான் நேத்து ஊருக்கு போயிருந்த போதும் இப்படி பிரச்சனை ஆரம்பிக்க நான் அடுத்த முறை ஊருக்கு(2 மாதம் கழித்துதான் போவேன்) வரும்போது குண்டாதான் வருவேன் அப்படினு சவால்(?!) விட்டுட்டு வந்துட்டேன்.

ஆனா என்ன பண்றதுனு ஒன்னும் புரியல. ஊரில் இருந்து வந்ததிலிருந்து ஆபிஸ்ல எல்லோரிடமும் கேட்டால் ஆளுக்கு ஒரு ஐடியா கொடுக்குறாங்க. கடைசில ஒருத்தன் வந்து ஏண்டா, பிளாக்ல மேட்டரே இல்லாம பதிவு போடுறீங்களே, அதுக்கு பதிலா இது போல உருப்படியான(?!) பதிவு ஏன் போடகூடாது கேட்டான்.

அப்புறம் தான் நம்ம பதிவுலகில பல ஜாம்பவான்கள் முதல் ஒல்லிபிச்சாண்டிகள் வரை எல்லா வகையிலும் இருக்கிறார்களே கேட்டால் ஐடியா கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை கேட்கிறேன்.


"குண்டாவது எப்படி???"

நான் கேள்விபட்ட சில வழிகள்:-

1. தினமும் மூன்று வேளையும் நல்லா சாப்பிடனும். சாப்பிட்ட உடனே தூங்கிடனும். இப்படி தினமும் செஞ்சா ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்குமாம்.

2. கவலைகளை மறந்து இருக்கனுமாம். கவலை இருந்தாவே உடல் நலமாக இருக்காதாம்.

3. "குடிமகன்" ஒருத்தர் கொடுத்த ஐடியா, வாரம் ஒரு பீர் சாப்பிட நல்லா குண்டாயிடலாம் என்றார். அதற்கு அடிமையாயிட்டா என்ன பண்ணனு கேட்டதுக்கு, அதுக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்கிறார்.

4. பாலும் தேனும் கலந்து குடிச்சா நல்ல பலன் இருக்கும்னு சொல்றாங்க.

டிஸ்கி: மக்கா, இதுல குண்டாவதற்கும் ஐடியா கொடுங்க, அப்படியே குண்டாயிட்டா ஒல்லியாவதற்கும் ஐடியா கொடுங்க....

ஏன்னா, நீங்க கொடுக்குற ஐடியாவுல ஓவரா குண்டாயிட்டா, ஒல்லி ஆவுரது எப்படினு தெரியனுமில்ல அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை....

41 நனைந்தவர்கள்:

.:: மை ஃபிரண்ட் ::. said...

குண்டாகணுமா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐடியா 1:

2 குண்டா வாங்கி வைங்க வீட்டுல.. அதுல தினமும் 4 வேலை நிறைய சாப்பாடு போட்டூ சாப்பிடுங்க.. :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐடியா 2:

2 குண்டர்களை வேலைக்கு வச்சிக்கோங்க.. தினமும் அவங்க என்ன சாப்பிடுறாங்கன்னு பார்த்து அதை மாதிரியேஏ ரெண்டு மடங்கு சாப்பிடுங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐடியா 3:

மேலே உள்ள ரெண்டு ஐடியாவும் வோர்க் அவுட் ஆகலைன்னா, ஊருக்கு போகும்போது, வயித்துல ஒரு துணி குண்டு கட்டிக்கோங்க.. கையில கால்ல எல்லா இடத்துலையும் குண்டு குண்டா கட்டி.. "நானும் குண்டாஅயிட்டேன் நானும் குண்டாயிட்ட்டேன்"ன்னு வடிவேலு எஃபெக்ட்டுல ஊருக்குள்ள் போங்க.. :-)

J K said...

வாங்க .:: மை ஃபிரண்ட் ::.


குண்டாகனும்ங்க...

முதல் 2 ஐடியாவும் ஓ.கே...

3-ஐடியா பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்னுதான்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

மூனாவது ஐடியாதான்ன் சூப்பரா இருக்கு.. அது வேணாம்ன்னு சொல்றீங்களே?

J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
மூனாவது ஐடியாதான்ன் சூப்பரா இருக்கு.. அது வேணாம்ன்னு சொல்றீங்களே?//

வேணாம்னு சொல்லலைங்க. மத்தத டிரை பண்ணுவோம். முடியலைனா உங்க 3-வது ஐடியாதான் ஊருக்கு போகும் போது.

டாக்டர் மாத்ருபூதம் said...

நான் ஒரே ஒரு ஊசி போட்டால் போதும். நீங்க குண்டாயிடுவீங்க..

JK said...

ஊசி எனக்கு வேனாம் வேணாம் வேணாம்.. (எக்கோ)

Anonymous said...

கத்தீரிக்காய் கத்தீரிக்காய்...
குண்டு கத்திரிக்காய்..
எந்த கடையில நீ அரிசி வாங்குறே??

தக்காளி said...

அப்போ எங்களையெல்லாம் பாட்டுல சேர்த்துக்க மாட்டீங்களா??

J K said...

//Anonymous said...
கத்தீரிக்காய் கத்தீரிக்காய்...
குண்டு கத்திரிக்காய்..
எந்த கடையில நீ அரிசி வாங்குறே??//

சொல்லு அனானி. எந்த கடைல வாங்க?

.:: மை ஃபிரண்ட் ::. said...

யாருப்பா இங்கே விளையாடுறது??? JK எவ்வளவு சீரியஸ் மேட்டரை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காரு...

குண்டன் said...

//சொல்லு அனானி. எந்த கடைல வாங்க?//

கவிதா நகர் கடைசி தெரு..

ஒல்லிகுச்சி உடம்புக்காரி said...

கீரை வாங்கலையோ கீரை..

கதாசிரியர் நல்லதம்பி said...

//கவிதா நகர் கடைசி தெரு..//

ஆஹா. அடுத்த கதைக்கு தலைப்பு கிடைச்சுடுச்சு.. :-))

ஓடி பிடிச்சு விலையாடுபவன் said...

என்னையா ஓனரு?? இருக்கீயலா? வாங்க விளையாடலாம்

ராம் said...

நான் எங்கே ஒளிஞ்சிருக்கேன்னு கண்டுபிடி பார்ப்போம்

விளையாட்டு காரன் said...

ராயலு கூட இங்கதான் இருக்காரு.. வா ராயலு.. விளையாடலாம்

கணக்கு பண்ணுபவன் said...

ஹய்யா.. 20

J K said...

அடப்பாவிகளா, எதாவது உருப்படியா நல்ல ஐடியா கொடுப்பீங்கனு பாத்தா இப்படி கும்மி அடிச்சுகிட்டு இருக்கீங்க...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அடப்பாவிகளா, எதாவது உருப்படியா நல்ல ஐடியா கொடுப்பீங்கனு பாத்தா இப்படி கும்மி அடிச்சுகிட்டு இருக்கீங்க...//

ரிப்பீட்டே...

வீடு தேடு அலைபவன் said...

அண்ணாத்தே ஃபீல் பண்றாருல.. வேற இடத்தை பார்த்து குடி போக வேண்டியதுதான். :-(

அட்வைஸ் வாலிபன் said...

JK, மை ஃபிரண்ட் மட்டும்தான் ஐடியா கொடுத்திருக்காங்க.. ஸோ, நீங்க அதன் படிதான் ஃபோல்லோ பண்ணனும். :-) சரியா??

ஜோதிகா said...

குண்டு குண்டு..
குண்டு பையா..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அடடா.ஜோதிகாவே உங்களை பார்த்து குண்டு பையன்னு சொல்லிட்டாங்க.. அப்புறம் என்ன கவலை JK.. சந்தோஷமா வீட்டுக்கு ஒரு போன் போட்டு சொல்லுங்க.. "நானும் குண்டாயிட்டேன்.. நானும் குண்டாயிட்டேன்"ன்னு. :-)

கப்பி பய said...

ஏன் ராசா திடீர்னு இப்படியொரு ஆசை?? :))

J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அடடா.ஜோதிகாவே உங்களை பார்த்து குண்டு பையன்னு சொல்லிட்டாங்க.. அப்புறம் என்ன கவலை JK.. சந்தோஷமா வீட்டுக்கு ஒரு போன் போட்டு சொல்லுங்க.. "நானும் குண்டாயிட்டேன்.. நானும் குண்டாயிட்டேன்"ன்னு. :-)//

அப்படி ஏதாவது சொன்னேனு வச்சுக்குங்க, ஊருக்கு போகும் போது அதுக்கு 2 மிதி சேர்த்து விழும்...

J K said...

//கப்பி பய said...
ஏன் ராசா திடீர்னு இப்படியொரு ஆசை?? :))//

வாங்க கப்பி அண்ணே!.

எவ்வளவு நாள் இப்படியே இருக்கிறது. ஒரு மாற்றம் வேணும்ல...

குசும்பன் said...

இங்க துபாய் வாங்க என் சமையலை சாப்பிடுங்க தானா குண்டாயிடுவீங்க..
ஏன்னா என் சமையலில் என் அன்பும் கலந்து இருக்கு...

மைதிலி (எடை 120 கிலோ) said...

கப்பி பய said...
ஏன் ராசா திடீர்னு இப்படியொரு ஆசை?? :))


ஏன்னா நான் கொஞ்சம் குண்டு கப்பி..இவுங்களும் கொஞ்சம் குண்டாக இருந்தாதேனே பொருத்தம் நல்லா இருக்கும்

மைதிலி எடை 121 கிலோ said...

"ஏன் ராசா திடீர்னு இப்படியொரு ஆசை?? "

இல்லீங்க கப்பி அவருக்கு என் மேல ரொம்ப நாளா ஆசை..

(அடுத்த பின்னூட்டம் போடுவதற்குள் என் எடை ஒரு கிலோ அதிகம் ஆகிவிட்டது)

J K said...

//குசும்பன் said...
ஏன்னா என் சமையலில் என் அன்பும்
கலந்து இருக்கு...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஆசைப்பட்டவன் said...

மைதிலி நீ எங்க அரிசி வாங்குற....

ஆசைப்பட்டு ஏமாந்தவன் said...

//மைதிலி நீ எங்க அரிசி வாங்குற..//

கடைலதான்!.....

J K said...

நான் ஏதாவது நல்ல விசயம்(?!) ஒன்னு பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். ஆனா கும்மி அடிச்சுட்டாங்க...

சரி விடுங்க....

எனக்கு கிடைச்ச இன்னும் சில வழிகள்:-

1. பாலில் தேன் கலந்து சாப்பிட்டா குண்டாகலாம்.

அதே தண்ணீரில் கலந்து சாப்பிட்டா ஒல்லி ஆகலாம்.

2. தினமும் முட்டை சாப்பிட்டா குண்டாகலாம்.

பி.கு: மொத்தத்தில் எது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியல.

யாராவது தைரியசாலியா இருந்தா டிரை பண்ணிட்டு சொல்லுங்க. நானும் கண்டினியூ பண்றேன்....

இலவசக்கொத்தனார் said...

கல்யாணம் செஞ்சா குண்டாயிடுவீங்க. நாட்டுல எம்புட்டு எக்ஸாம்பிள் இருக்கு.:))

வித்யா கலை(ள)வாணி said...

//இங்க துபாய் வாங்க என் சமையலை சாப்பிடுங்க தானா குண்டாயிடுவீங்க..
ஏன்னா என் சமையலில் என் அன்பும் கலந்து இருக்கு...//

அண்ணா துபாய் போகாதீங்க! சதி நடக்குது! உயிருக்கு ஆபத்து!

J K said...

//இலவசக்கொத்தனார் said...
கல்யாணம் செஞ்சா குண்டாயிடுவீங்க. நாட்டுல எம்புட்டு எக்ஸாம்பிள் இருக்கு.:))//

வாங்க கொத்தனார் அண்ணா.

ஒரு ஆசைக்காக என்ன செய்ய சொல்லீட்டீங்க...

அம்மாடியோவ்....

அதுக்கு இப்ப்டியே இருந்துட்டு போயிரலாம்.

J K said...

//வித்யா கலை(ள)வாணி said...
அண்ணா துபாய் போகாதீங்க! சதி நடக்குது! உயிருக்கு ஆபத்து!//

வாங்க வித்யா.

தகவலுக்கு நன்றிங்க.

உயிர காப்பாத்திட்டீங்க.

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
இங்க துபாய் வாங்க என் சமையலை சாப்பிடுங்க தானா குண்டாயிடுவீங்க..
ஏன்னா என் சமையலில் என் அன்பும் கலந்து இருக்கு...
//
வித்யா கலை(ள)வாணி said...
அண்ணா துபாய் போகாதீங்க! சதி நடக்குது! உயிருக்கு ஆபத்து!
//
:-))))))))