மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...

18 நனைந்தவர்கள்:

இலக்கியன் said...

கலக்குறீங்கப்பா... அருமையான கவிதை.. தொடரட்டும் தங்கள் தமிழ் பணி...
மீண்டும் மீன்டும் மீண்டும்..............வருவேன்..

நன்றி

Anonymous said...

ரொம்ப மொக்கையான கவிதை இது.

கார்த்திக் பிரபு said...

hi pls add my googlepages in your blog frends list or favorites

its a page for tamil ebooks , free downloads.

thanks for addding

url - http://gkpstar.googlepages.com/

இராம்/Raam said...

அழகான கவிதை... :)

காயத்ரி said...

//நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...//

ரொம்ப நல்லாருக்கு ஜே.கே! :)

வேதா said...

/எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை.../
அவ்வாறு அமைந்துவிடும் பிரிவுகள் அரிது தானில்லையா?:)

/நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட.../
அருமையான வரிகள் :)

கோவி.கண்ணன் said...

//எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...//

உண்மையான வரிகள். பாராட்டுக்கள் !

J K said...

நன்றிங்க இலக்கியன்.

வாங்க வாங்க...

//ரொம்ப மொக்கையான கவிதை இது.//

அப்படிங்களா அனானி.

இனி நல்ல கவிதை கொடுக்க முயற்சிக்கிறேன்.

J K said...

வாங்க கார்த்திக் பிரபு

உங்க பக்கங்களில் இன்னும் நிறைய கொடுங்க...

J K said...

//அழகான கவிதை... :)//

நன்றிங்க இராம் அண்ணே.


//ரொம்ப நல்லாருக்கு ஜே.கே! :)//

நன்றிங்க காயத்ரி.

J K said...

//அருமையான வரிகள் :)//

நன்றிங்க வேதா.

//உண்மையான வரிகள். பாராட்டுக்கள் !//

நன்றிங்க கோவி அண்ணா.

G3 said...

//நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...//

nijamaavae neenga nenacha alavukku mokkaiya varalae :P nallavae vandhirukku :)))

குசும்பன் said...

சூப்பருங்கோ!!!

ஜி said...

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் ஜேகே.

J K said...

//G3 said...
nijamaavae neenga nenacha alavukku mokkaiya varalae :P nallavae vandhirukku :)))//


ஆஹா...

அதாங்க, நம்ம நினைக்கிற மாதிரி நடக்குதா?

J K said...

வாங்க குசும்பன்.

நன்றிங்க அண்ணே.

//ஜி said...
அருமையான வரிகள். வாழ்த்துக்கள் ஜேகே.//

நன்றிங்க ஜி...

rangan said...

ungalin kavithai superaga irunthathu
endru sollikolla aasai padugiren anaal...

J K said...

வாங்க ரங்கா தம்பி.

சீக்கிரம் தமிழ்ல பிளாக் எழுதுங்க...