ரோமியோ - ஜூலியட்


நேற்றுதான் ரோமியோ ஜூலியட் காதல், புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. படித்து முடித்தவுடன் சிறந்த காதலர்கள், அப்படி, இப்படி என்று ஏன் புகழ்கிறார்கள் என்பதற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை.

ரோமியோ சிறந்த காதலனா?. முதலில் ரோஸலின் என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை. அந்த ஊரில் நடக்கும் ஒரு விருந்துக்கு ரோஸ்லின் வருகிறாள் என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து இவனும் அந்த விருந்துக்கு செல்கிறான். அங்கு ரோஸலினை விட அழகாக ஜூலியட்டைப் பார்க்க, ஜூலியட்டும் ரோமியோவைப் பார்க்க, இருவர்க்கும் பல்பு எறிந்து, ஒளிவட்டம் தோன்றி காதலாக மாறுகிறது. இருவரும் அவரவர்களின் ஜன்ம விரோதிகளின் வாரிசுகளைத்தான் காதலிக்கிறோம் என தெரிந்தும், அவர்களை காதலே வெல்கிறது. குடும்ப சண்டை காரணமாக ஒன்று சேர முடியாது என்று, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடித்து அவரவர் வீட்டிற்கு திரும்பி செல்கிறார்கள். அப்போது ஜூலியட்டின் சகோதரன், ரோமியோவிடம் வீண் சண்டைக்கு அழைக்க, அந்த சண்டையில் ரோமியோவின் உயிர் நண்பன் கொல்லப்படுகிறான். அந்த ஆத்திரத்தில் ரோமியோ ஜூலியட்டின் சகோதரனை கொன்று விடுகிறான். இதனால் நாடு கடத்தப்படுகிறான். இந்நிலையில் ஜூலியட்டிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பெற்றோரிடம் திருமணம் வேண்டாம் என்றும், தனக்கும் ரோமியோவிற்கும் திருமணம் நடந்துவிட்டதும் என்று கூறுகிறாள். ஆனால் அவர்கள் கேட்பதாய் இல்லை. இதனால் திருமணம் செய்து வைத்த பாதிரியாரின் உதவியை நாடி செல்கிறாள்.

பாதிரியாரின் யோசனைப்படி மயக்க மருந்தை சாப்பிட்டு விட்டு இறந்தது போல் இருக்க, இறந்துவிட்டாள் என எண்ணி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கின்றனர். இவை எல்லாம் ஒரு நாடகம், நீ வந்து ஜூலியட்டை அழைத்து செல் என கடிதம் ஒன்றரை ரோமியோவிற்கு அனுப்புகிறார் பாதிரியார். ஆனால் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் அக்கடிதம் போய் சேரவில்லை. ஆனால் ஜூலியட் இறந்துவிட்டாள் என்று செய்தி மட்டும் வேறொருவன் மூலம் வந்து சேருகிறது. உண்மையாகவே இறந்துவிட்டாள் என்று எண்ணி, கல்லறை சென்று அவளின் முகத்தை பார்த்துவிட்டு விஷம் குடித்து இறந்துவிடுகிறான். அப்போது ஜூலியட்டும் மயக்கம் தெளிந்து எழுகிறாள். ரோமியோ இறந்தது கண்டு தானும் வாளை மார்பில் செறுகிக்கொண்டு உயிர்விடுகிறாள்.

அப்போது அங்கு வந்த எல்லொரிடமும் (இருவரின் பெற்றோர் உட்பட), பாதிரியார் நடந்ததை கூறுகின்றார். இரு குடும்பமும் தன் பழைய பகையை மறந்து நண்பர்களாகின்றனர். இவர்களின் காதலை போற்றும் விதமாக ஊரில் நடுவில் இருவர்க்கும் சிலை வைக்கிறார்கள்.


எனக்குள் இருந்த கேள்வி கண்ணாயிரம் விழித்துக்கொண்டு கேட்ட சில கேள்விகள்:

1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.

2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?

3. வாழாமல் அற்ப ஆயுளில் முடிவது தான் சிறந்த காதலா?.

எங்க போறீங்க?. பதில் சொல்லிட்டு போங்க...

21 நனைந்தவர்கள்:

கோவி.கண்ணன் said...

கொல்லிமலைச் சாரல் திரும்பவும் வந்துட்டா ?

மிக்க மகிழ்ச்ச்சி !

//1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.//

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் காதலுக்காக உயிரைவிட துணிவதெல்லாம் ஐரோப்பிய இனத்தில் செயற்கரிய செயல், அத்தி பூத்தார் போல் நடந்ததால் தான் ரோமியோ ஜூலியட் கதை போற்றப்படுகிறது என்று நினைக்கிறேன்

குசும்பன் said...

2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?//

புதிய காதிலின் வேகம் மணிக்கு எவ்வளோ கிலே மீட்டர் ஸ்பீட்,
பழைய காதல் எவ்வளோ? முதலில் இதுக்கு பதில் சொல்லும் ஒய்.
பிறகு உங்க கேள்விக்கு பதில் சொல்கிறேன்( ஆதாரத்தோடு வேண்டும்)

Anonymous said...

வழக்கம்போல கேணைத்தனமான பதிவு

ஜே கே | J K said...

//கோவி.கண்ணன் said...
கொல்லிமலைச் சாரல் திரும்பவும் வந்துட்டா ?

மிக்க மகிழ்ச்ச்சி !//

வந்துட்டேன்.

நீங்க சொல்றது போலவும் இருக்கலாம்.

ஜே கே | J K said...

வங்க மிஸ்டர் குசும்பன் வாங்க.

நீங்க மொத கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்க. அப்புறமா தான் 2-வது கேள்வி.

ஹா ஹா

ஜே கே | J K said...

//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.

கோவி.கண்ணன் said...

////Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.//

ஜெய்...

அனானிக்கு சரியான கொட்டு.
கோழதனம் இல்லை அது கோழைத்தனம்... இல்லாட்டி இங்கே அவர் செய்ததை கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம்.

Unknown said...

புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம்ம வெட்டி ஸ்டைல்ல ஷேக்ஸ்பியரும் ஒரு டிஸ்கி போட்டிருந்தா நீ இப்படி எல்லாம் கேள்விக் கேட்டிருப்பியா??? :-)

TBCD said...

ஏம்பா பார்த்ததும் காதல், பாக்கமா காதல், உக்கார்ந்ததும் காதல், விழுந்ததும் காதலுன்னு எத்தனை காதல் பார்த்திருக்க..அதுல இது..பழைய வகையான காதலப்பா...

இப்போ..நீ கூட கிராவிட்டி பத்தி சொல்ல முடியும்..ஆனா நியூட்டன் பேர் தான் முன்னாடி நிக்கும் அது போல..

பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர் போட வேண்டிய நிலமைக்கு ஆளான தம்பி போல...

முன்னாடி வந்ததாலே..இது சிறப்பு செய்யப்பட்டு விட்டது....

வேனுமின்னா...நீயும் காதல் பண்ணு....

தமிழ் மணத்தையே சிறக்க வச்சிருவோம்...என்னபா சொல்லுற,.....

TBCD said...

நச்சுன்னு நடு மண்டையிலே வச்சா மாதிரி இருந்திச்சு....

//*J K said...
//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.*//

குசும்பன் said...

J K said...
வங்க மிஸ்டர் குசும்பன் வாங்க.

நீங்க மொத கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்க. அப்புறமா தான் 2-வது கேள்வி.

ஹா ஹா///

முதல் கேள்விக்கு பதில் ஆமாம் அழகாய் இருந்திருந்தால் அங்க ஓடி போய் இருப்பான் .

இப்ப புதிய காதலின் வேகம் எவ்வளோ? மைலேஜ் எவ்வளோ?

குசும்பன் said...

J K said...
//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.///


இங்கதான் JK நீங்க நிக்கிறீங்க செம சாட்!!!

ஜே கே | J K said...

வாங்க தேவ் அண்ணா.

நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்தி அவ்வளவா தெரியல போல. :P

என்ன பண்ண...

ஜே கே | J K said...

வாங்க TBCD.

//பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர் போட வேண்டிய நிலமைக்கு ஆளான தம்பி போல...//

அவ்வ்வ்வ்வ்வ்......

//வேனுமின்னா...நீயும் காதல் பண்ணு....

தமிழ் மணத்தையே சிறக்க வச்சிருவோம்...என்னபா சொல்லுற,.....//

இதுக்கு தான் சொ. செ. சூ சொல்வாங்களோ?...

ஜே கே | J K said...

//இப்ப புதிய காதலின் வேகம் எவ்வளோ? மைலேஜ் எவ்வளோ?//

//பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர் போட வேண்டிய நிலமைக்கு ஆளான தம்பி போல...//

ரெண்டையும் மேட்ச் பண்ணி பாருங்க...

அண்ணன் உங்களுக்கு தெரியாததா?

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

ஆஹா! எதிர்மறை விமர்சனமெல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சா?

கையைக் கொடுங்க ஜே.கே!

நீங்க மூத்த பதிவர் ஆயிட்டீங்க!

வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

//
நாமக்கல் சிபி said...
ஆஹா! எதிர்மறை விமர்சனமெல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சா?

கையைக் கொடுங்க ஜே.கே!

நீங்க மூத்த பதிவர் ஆயிட்டீங்க!

வாழ்த்துக்கள்!
//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

//1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.//
:-)))))))

மங்களூர் சிவா said...

//
தேவ் | Dev said...
புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம்ம வெட்டி ஸ்டைல்ல ஷேக்ஸ்பியரும் ஒரு டிஸ்கி போட்டிருந்தா நீ இப்படி எல்லாம் கேள்விக் கேட்டிருப்பியா??? :-)
//
//
J K said...
வாங்க தேவ் அண்ணா.

நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்தி அவ்வளவா தெரியல போல. :P

என்ன பண்ண...
//
ஓல்ட் மேன்!!!!
:-)))))))))

ஜே கே | J K said...

//மங்களூர் சிவா said...
//
தேவ் | Dev said...
புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம்ம வெட்டி ஸ்டைல்ல ஷேக்ஸ்பியரும் ஒரு டிஸ்கி போட்டிருந்தா நீ இப்படி எல்லாம் கேள்விக் கேட்டிருப்பியா??? :-)
//
//
J K said...
வாங்க தேவ் அண்ணா.

நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்தி அவ்வளவா தெரியல போல. :P

என்ன பண்ண...
//
ஓல்ட் மேன்!!!!
:-)))))))))//

வாங்க சிவா.

Divya said...

\\1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.\\

புற அழகைமட்டுமே விரும்பி அரும்பிய காதலாக இருந்தால், இன்னும் கூடுதல் அழகை கண்டால், மனம் மாற வாய்ப்புகள் உண்டு!!

\\2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?//

காதலின் வேகம் காதலின் ஆயுளோடு கூட கூடுவதே உண்மையான காதலுக்கு அழகு, இனக்கவர்ச்சியினால் ஏற்பட்ட காதலின் வேகம்.....நாட்கள் நகர நகர மறையலாம், குறையலாம்!!

\\3. வாழாமல் அற்ப ஆயுளில் முடிவது தான் சிறந்த காதலா?.\\

வாழ்க்கை வாழ்வதற்கே காதலுடன்!!