என் இதயம் சொல்லவில்லையா...அழகாக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் உட்கார்ந்திருந்த கவின் ஒவ்வொரு புல்லாக பிடுங்கிக்கொண்டிருந்தான். அவன் கண் அடிக்கடி வாட்சையும், வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தது. அஞ்சு நிமிசத்துக்குள்ள 15 தடவ டைம் பார்த்திருப்பான். ச்ச இந்த டைம் போகவே மாட்டிங்குதே என்று முணுமுணுத்துக்கொண்டே பூங்காவின் வாசலைப்பார்த்த போது, அங்கே நிஷா அழகாய் தாவணியில் வந்து கொண்டிருந்தாள்.

அதுவரை "அவள் வருவாளா? என ஏங்கிக்கொண்டிருந்த மனம் அவளை பார்த்ததும் படபடப்பாகியது. ச்ச ஏன் இப்படி டென்சன் ஆகுது என நொந்துகொண்டே அவளைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்து, என்ன இன்னிக்கு ஆச்சர்யமா இருக்கு, ஐயா சீக்கிரமே வந்துட்டீங்க என கூறிக்கொண்டே அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள்.

சாய்ந்திரம் ஆயிடுச்சு, ஆனா இன்னும் எப்படி வெயில் அடிக்குது பாரு, இதுல டிராபிக் வேற, வர்ரதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு பா என்று வியர்வையை துடைத்துக்கொண்டாள்.

இதுவே வேறெப்போதாவது இருந்திருந்தா, அவள் வியர்வைக்கும் ஒரு கவிதை சொல்லி இருப்பான். ஆனால், பேச வார்த்தையே இல்லாதது போல் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏண்டா ஒரு மாதிரி டல்லா இருக்க?"

அதற்குள் நிஷாவின் மொபைல் சிணுங்கியது. இவனுக்கு மிகவும் பிடித்த "முதற்கனவே" பாடலைதான் அவள் ரிங்டோனாக வைத்திருந்தாள். ஆனால் இப்போது அதுவே வெறுப்பாக இருந்தது. அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, பின்பக்கம் இருந்த குளத்தில் குழந்தைகள் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏய் வெனஸ்டே கவிதா பர்த்டே பார்ட்டி சூப்பரா இருந்துச்சு தெரியுமா, நீ தான் மிஸ் பண்ணிட்ட..."

"ம்..."

"அவளுக்கு கிப்ட் வாங்க போனப்போ ரோஸ் ட்ராயிங் பார்த்தேன். ரோஸ்னா உனக்கு ரொம்ப பிடிக்குமேனு வாங்கிட்டு வந்துட்டேன்" - என ஒரு பெட்டியை கொடுத்தாள்.

"டேய், நான் சொன்னேனில்ல அந்த புக் படிச்சு முடிச்சுட்டேன், சூப்பரா இருக்கு, நீயும் படி" என்று ஒரு கவரை கொடுத்தாள்.

அப்படியே அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள், இவன் அமைதியாகவே இருந்தான், அவ்வப்போது கேள்விக்கு மட்டும் எதாவது பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

சரிடா நான் கிளம்புறேன், அம்மா எங்கயோ வெளியில போகணும்னு சீக்கிரம் வரச் சொன்னாங்க. நான் கிளம்பறேன் என எழப்போனவளிடம்...

"ஏய் நிஷா"

"ம். என்ன?"

"எதுவுமே சொல்லல."

"என்ன சொல்ல சொல்ற."

"நான் அன்னிக்கு கொடுத்த புக் பாத்தியா இல்லையா?"

"ம்.பாத்தேனே."

"அப்புறம்..."

"அப்புறம்னா?"

"நீ எதுவும் சொல்லலையே."

"அப்படியா. நான் எதுவும் சொல்லலியா?"

"சரி...
வீட்டுக்கு போய் நான் கொடுத்த புக்க மெதுவா படி எல்லாம் புரியும்" - என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அவசர அவசரமாக அங்கேயே பிரித்தான்.

முதல் பக்கத்திலேயே

நிஷா
கவின்
.

என்று இருந்தது.

அதற்குள் நிஷா-விடம் இருந்து குறுஞ்செய்தி.
பார்த்தான்.

தவியாய் தவித்தவனே
உனக்கு பிடித்த
உடைதானே அணிந்திருந்தேன்.
புரியாமல்
தவித்தது ஏனோ?


என்றிருந்தது...

அட ஆம, இன்னிக்கு மாம்பழ கலர் தாவணி போட்டிருந்தாளே என யோசிக்கும் போதே அவனையறியாமல் லேசாய் சிரித்தான்.

புத்தகத்தின் அடுத்த பக்கத்தில்

கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...


என்றிருந்தது.

26 நனைந்தவர்கள்:

Thangam said...

எனக்கு கதைய விட படம் ரொம்ப பிடிச்சிருக்கு :)

CVR said...

ஆஹா!!
அழகான கதை!!!

வாழ்த்துக்கள்!! :-)

G3 said...

ஆஹா.. அண்ணே காதல் கடல்ல நீச்சல் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல??

எனிவேஸ் வாழ்த்துக்கள் :-)) நல்லா செலிபிரேட் பண்ணுங்க நாளைக்கு :D

G3 said...

போட்டோ & கவிதை டாப் டக்கர். அதுக்கு ஏத்த சிட்டுவேஷன் கதைன்னு அசத்திட்டீங்க :)

இதயம் said...

///கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...///

அன்னைக்கு மெளனவிரதம் இருந்தேன் :) அதான் சொல்ல முடியவில்லை...

குசும்பன் said...

கதை அருமையா இருக்கு !!!! யார் அந்த தேவதை யார் அந்த தேவதை... சும்மா பாட்டு ஹம் செஞ்சேன் நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க:))))

கப்பி பய said...

கலக்கல் மக்கா :)

J K said...

// Thangam said...
எனக்கு கதைய விட படம் ரொம்ப பிடிச்சிருக்கு :)//


நன்றிங்க Thangam.

//CVR said...
ஆஹா!!
அழகான கதை!!!//

நன்றிங்க CVR

J K said...

//G3 said...
ஆஹா.. அண்ணே காதல் கடல்ல நீச்சல் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல??//

ஹி ஹி ஹி

//போட்டோ & கவிதை டாப் டக்கர். அதுக்கு ஏத்த சிட்டுவேஷன் கதைன்னு அசத்திட்டீங்க :)//

ரொம்ப நன்றிங்க G3.

J K said...

//குசும்பன் said...
கதை அருமையா இருக்கு !!!! யார் அந்த தேவதை யார் அந்த தேவதை... சும்மா பாட்டு ஹம் செஞ்சேன் நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க:))))//

நன்றிங்க அண்ணே
நீங்க பாடுங்க....

J K said...

நன்றி கப்பி.

நாமக்கல் சிபி said...

JK,

Really Superb.

Saralil - Blog Peyarukku poruthamana kadhai!

Anyway Vaazthukkal!

நாமக்கல் சிபி said...

//கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...
//

Touching Lines! Superb!

I proud of You!

cheena (சீனா) said...

மனம் ஒரு வழிப்பாதையாக சிந்திக்கும் போது கண்ணில் படும் காட்சிகள் தெரிவதில்லை. நிஷாவின் அணுகுமுறை பாராட்டத்தக்கது. கவினின் அவசரம் ஆராயத்தக்கது. அருமையான கதை - படம் - நடை. வாழ்த்துகள்

உதயா said...

என் இதயம் சொல்லவில்லையா...
கதையின் படம்தான் என் desktop background... மிகவும் நல்ல வரிகள்..

Divya said...

Exlnt JK,
Romba alaga irunthathu kavithai & kadhai!!

ஜே கே | J K said...

நன்றி சிபி அண்ணா.

ஜே கே | J K said...

//cheena (சீனா) said...
மனம் ஒரு வழிப்பாதையாக சிந்திக்கும் போது கண்ணில் படும் காட்சிகள் தெரிவதில்லை. நிஷாவின் அணுகுமுறை பாராட்டத்தக்கது. கவினின் அவசரம் ஆராயத்தக்கது. அருமையான கதை - படம் - நடை. வாழ்த்துகள்//

நன்றிங்க cheena (சீனா) சார்.

ஜே கே | J K said...

//உதயா said...
என் இதயம் சொல்லவில்லையா...
கதையின் படம்தான் என் desktop background... மிகவும் நல்ல வரிகள்..//

நன்றிங்க உதயா

----------------

//Divya said...
Exlnt JK,
Romba alaga irunthathu kavithai & kadhai!!//

நன்றிங்க Divya.

aruna said...

//கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...//

இதயம் சொல்லாமல் போவதால்தான் கடிதம்,மின்னஞ்சல்,தொலை பேசி இன்னும் எத்தனையோ!!!
அருமையான கதையும், கவிதையும்!!
அன்புடன் அருணா

ஜே கே | J K said...

நன்றிங்க அருணா.

மங்களூர் சிவா said...

ம் நல்லா இருக்கு.

மங்களூர் சிவா said...

//
அழகாக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் உட்கார்ந்திருந்த கவின் ஒவ்வொரு புல்லாக பிடுங்கிக்கொண்டிருந்தான்
//

பெரிய * * * * * இருப்பான் போல இருக்கே!!!
:)))))

(ஜோக்கு கோச்சுக்கபிடாது)

மங்களூர் சிவா said...

//
தவியாய் தவித்தவனே
உனக்கு பிடித்த
உடைதானே அணிந்திருந்தேன்.
புரியாமல்
தவித்தது ஏனோ?


கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...

//

அவ்வ்வ்வ்

ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

மங்களூர் சிவா said...

//
cheena (சீனா) said...
மனம் ஒரு வழிப்பாதையாக சிந்திக்கும் போது கண்ணில் படும் காட்சிகள் தெரிவதில்லை
//

பாத்து நேஷனல் பெர்மிட் லாரியெல்லாம் நிறைய வர்ற ரோடு இது!!!

:)))

ஜே கே | J K said...

நன்றிங்கோ மங்களூர் சிவா.