மரங்கள்



யார்மீது கோபமோ
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.
நீண்ட சாலையில்
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.
வளர்ந்துவிட்ட
நகரத்தின் அடையாளமாய்
நடமாடும் மனித இயந்திரங்கள்
காங்கிரீட் கட்டிடங்கள்.
வாகன நெரிசலும், புகையும்...
வெகுநேரமாக சுற்றுகிறேன்
எங்கும் தென்படவில்லை
மரமெனும் மகத்துவம்
மெதுவாக புரிய ஆரம்பித்தது
சூரியனின் கோபம்.

2 நனைந்தவர்கள்:

cheena (சீனா) said...

மரங்களை மறந்து காலங்கள் ஆகி விட்டது. இருக்கவே இடம் இல்லாத போது மரத்துக்கு எங்கே இடம் கொடுப்பது ? இயற்கையின் சீற்றம் இதனால் தான்

ஜே கே | J K said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சீனா சார்.