நாம் நண்பர்களே!

உன்னை
சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும்
எனக்கு குழப்பமே.
நம்
உறவுக்குப் பெயர்
நட்பா? காதலா? என்று...
நீ
இல்லாத தருணத்தில்
உன் பெற்றோரின்
விசாரிப்புகளும்
தங்கையின்
புன் சிரிப்பும்
தம்பியின்
உரையாடலும்
உறுதிப்படுத்துகின்றன
நாம்
நண்பர்கள் என்று...

7 நனைந்தவர்கள்:

கமல் ராஜன்.பா said...

அசத்தல் கவிதை ஜெயா.. அருமையான கவிதை நட்பை பற்றி.. தொடரட்டும்..

J K said...

நன்றி கமல்...

Anonymous said...

Hi Jeya!
I saw ur webside.
Its very nice......

by
UshaRani.k

ஷைலஜா said...

கவிதை வித்தியாசமா இருக்கு.வாழ்த்து..ஆனா இன்னும் நல்லா உங்களால எழுதமுடியும்ப்ரதர்!
ஷைலஜா

J K said...

நன்றிங்க ஷைலஜா அக்கா!

கண்டிப்பா நான் டிரை பண்றேன்.

காயத்ரி said...

ம்ம்.. நல்லா இருக்குங்க!

J K said...

நன்றிங்க காயத்ரி...