இந்தியா

இந்தியா,
ஜனநாயக நாடு
மக்கள் சொல்வதுதான்
எதுவுமே நடப்பதில்லை...
இருந்தாலும்
இந்தியா ஜனநாயக நாடு.

வேற்றுமை காணாத நாடு
போராடித்தான் பெறவேண்டும்
இட ஒதுக்கீடு
இருந்தபோதிலும்
இந்தியா வேற்றுமை காணாத நாடு

ஒற்றுமையான நாடு
அண்டை மாநிலத்துக்கே
தண்ணீர்தர மாட்டார்கள்
இருந்தாலும்
இந்தியா ஒற்றுமையான நாடு

பண்பாடு நிறைந்த நாடு
திருமணத்திற்கு முன்பே
உடலுறவு கொள்வோர் பலர்
இருந்தாலும்
இந்தியா பண்பாடு நிறைந்த நாடு

சாதி, மத பேதம் பார்க்காத நாடு
அரசியல் செய்ய மட்டும்
எல்லா ஜாதியும் வேண்டும்
இருந்தபோதிலும்
இந்தியா சாதி, மத பேதம் பார்க்காத நாடு

எல்லா நாடுகளிலும்
இந்தியாவை பார்த்து
கற்றுக்கொள்கிறார்களாம்.
என்ன கற்றுக்கொள்கிறார்கள்
இப்படி இருக்க வேண்டும் என்றா?
இப்படி இருக்க கூடாது என்றா?
அது தான் தெரியவில்லை....

5 நனைந்தவர்கள்:

Athi said...

hello... ithellaam ungalukkey over'aa theriyalai... Mathathu ellaam okay. But, andha 2nd stanza "Vetrumai...", suthamaa poruntha maattenguthey... "Vertrumai kaanaatha naadu"naa, then, ellaarum samam thaaney... appo, ida odhukkeedu ethukku??
Yethuvum arasiyal katchiyila sernthutteengalaa??

BTW... Naan "avaal" ellaam illai.

J K said...

தங்களுடைய கருத்துக்கு நன்றி திரு.ஆதி.
//Yethuvum arasiyal katchiyila sernthutteengalaa??
//

இப்போதுள்ள அரசியல் கட்சிகளையும், அவற்றின் போக்கையும் பார்த்தால் அரசியலே வெறுத்துவிடும் போல் தோன்றுகிறது. அப்புறம் நாம் எங்கு போய் அரசியலில் சேர...

//appo, ida odhukkeedu ethukku??//

நான் புதிதாக இட ஒதுக்கீடு கேட்கவில்லை, ஒதுக்கீடு செய்த இடட்தையே மீண்டும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.

நாமக்கல் சிபி said...

ஜே.கே!
வியர்டு தொடரில் உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

பார்க்க : வியர்டோ நான் டாவின்ஸி!?

பழூர் கார்த்தி said...

//எல்லா நாடுகளிலும்
இந்தியாவை பார்த்து
கற்றுக்கொள்கிறார்களாம்.
என்ன கற்றுக்கொள்கிறார்கள்
இப்படி இருக்க வேண்டும் என்றா?
இப்படி இருக்க கூடாது என்றா?
அது தான் தெரியவில்லை.... //

அழகா, அருமையா கவிதைப் படுத்தியிருக்கீங்க..

நச்சோ நச்..

J K said...

நன்றி கார்த்தி...