என்ன இது?...

உன்னை
என்னவென்று சொல்வது?...
நான் அழும்போது
என்னோடு அழுதவள்...
சிரித்தபோது
சேர்ந்து சிரித்த்வள் நீ.
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இருந்தவள்.
இன்றோ
எங்கிருக்கிறாயோ?
எப்படி இருக்கிறாயோ?
எல்லாம் முடிந்துவிட்டது.
இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று...

18 நனைந்தவர்கள்:

கடன் கொடுத்து ஏமாந்தவன் said...

//மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று... //

ஆமா! சந்திக்காம இருந்திருந்தா என் 500 ரூவா தப்பிச்சிருக்கும்!

கடன் வாங்கி ஏமாத்தியவன் said...

//இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று... //

ஆமாம் நண்பா! இன்னொரு முறை நாம் சந்திக்கவே வேண்டாம்!

ஒரு முறை சந்தித்ததற்கே இவ்வளவு வருத்தப் படுகிறாய். அதனால் மீண்டும் சந்தித்து உன்னை சங்கடப் படுத்த மாட்டேன்!

J K said...

//ஆமா! சந்திக்காம இருந்திருந்தா என் 500 ரூவா தப்பிச்சிருக்கும்!//

அதுக்குனு என்ன பண்ண

சில விசயங்கள் விதி பயன். நடந்தே தீரும்.

கவல படாத கண்டிப்பா திருப்பி கொடுக்கிறேன்.

பி.கு: அவளையே கல்யாணம் பண்ணிகிட்டா

J K said...

//ஒரு முறை சந்தித்ததற்கே இவ்வளவு வருத்தப் படுகிறாய். அதனால் மீண்டும் சந்தித்து உன்னை சங்கடப் படுத்த மாட்டேன்! //

அப்பாடா நான் தப்பிச்சேன்(மெதுவாய்)

ரேகா said...

என்னங்க ஜே.கே இப்படி இருக்கீங்க?

ஒரு 500 ரூபாய்க்காக என்னை அப்படியே கட் பண்ணி விட பார்க்குறீங்களே!

இது நியாயமா?

J K said...

//ரேகா said...
என்னங்க ஜே.கே இப்படி இருக்கீங்க?

ஒரு 500 ரூபாய்க்காக என்னை அப்படியே கட் பண்ணி விட பார்க்குறீங்களே!

இது நியாயமா? //

ஆமா போ!.

எத்தன 500 ரூபா போறது?...

நம்மாள முடியாது. ஆள விடு ஆத்தா...

ரஞ்சனி said...

இராம் அத்தான் வர வர சரியில்லை!

நீங்க எப்படின்னு கொஞ்சம் அப்சர்வ் பண்ணுறேன்!

ஓகேன்னு தோணினால் இனிமே நீங்கதான் எனக்கு ஐத்தான்!

J K said...

நாங்கல்லாம் ஓகே ஆயிருவோம்.

ஆனா இராம் மாதிரி என்னையும் கழட்டி விட்டரலாம்னு நினைச்சுறாத.

மின்னுது மின்னல் said...

"என்ன இது?..."
///

கவுஜ...:)

J K said...

நல்ல கண்டுபிடிப்பு....

கண்டுபுடிச்சதுக்கு நன்றி...

மின்னுது மின்னல் said...

J K said...
நல்ல கண்டுபிடிப்பு....

கண்டுபுடிச்சதுக்கு நன்றி...
///

நன்றிக்கு நன்றி

பித்தன் said...

சிரித்தபோது
சேர்ந்து சிரித்த்வள் நீ.
நான் அழும்போது
என்னை விட்டு ஓடியவள் நீ
எல்லாம் முடிந்துவிட்டது.
எங்கிருக்கிறாயோ?
எப்படி இருக்கிறாயோ?


P

நாமக்கல் சிபி said...

//"என்ன இது?..."
///

கவுஜ...:)

//

இதுக்குத்தான்யா மின்னல் வேணும்ங்கிறது!

என்னுடைய வலையுலக வாரிசு மின்னலாத்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்!

:)

J K said...

//என்னுடைய வலையுலக வாரிசு மின்னலாத்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்!//

இதுக்கு வாரிசு கூட இருக்கா?..

வலையுலக மக்களே இனி கொஞ்சம் கஷ்டம் தான்.

தேவ் | Dev said...

எதுக்கு அய்யா இம்புட்டு பீலிங்க்ஸ்? சிபி கூட ஓவராச் சேராதீங்கன்னாக் கேட்டாத் தானே?

Nandha said...

அடப் பாவிகளா! எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல கவிதையை மொக்கை கவிதயாக்கிட்டீங்களே.....

//எல்லாம் முடிந்துவிட்டது.
இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று... ///

நல்ல வரிகள்..... யாரு பெத்த புள்ளையோ இவ்ளோவ் சோகமா இருக்கே.......

J K said...

// தேவ் | Dev said...
எதுக்கு அய்யா இம்புட்டு பீலிங்க்ஸ்? சிபி கூட ஓவராச் சேராதீங்கன்னாக் கேட்டாத் தானே? //

என்ன பண்ண..

எங்க போனாலும் முன்னாடி அவர்தான் நிக்கிறாரு...

J K said...

வாங்க நந்தா.

என்ன பண்றது.

ஒரு குரூப் ரெடியா இருக்கு எங்க போய் கும்மி அடிக்கலாம் அப்படினு.

எம்ம கைல எதுவுமே இல்ல.