அந்த அழகிய நினைவுகள்
எங்கே மறப்பது
உன்னையும்
உன் நினைவுகளையும்...
ஞாபக முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன...
பச்சரிசி பல்வரிசையில்
பளீர் புன்னகை தானே
முதலில் வரவேற்கும்...
சிக்கல் இல்லாத
உன் நீண்ட கூந்தலில்
சிக்கிகொண்டது நானல்லவா?...
அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...
கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...
இப்படியாய்
காதல் என்று சொல்லமுடியாத
அந்த அழகிய நினைவுகள்
வந்து கொண்டேயிருக்கின்றன
என்னுள்....
9 நனைந்தவர்கள்:
தோழிக்கு எழுதப்பட்ட கவிதையா???
//பச்சரிசி பல்வரிசையில்
பளீர் புன்னகை தானே
முதலில் வரவேற்கும்...
சிக்கல் இல்லாத
உன் நீண்ட கூந்தலில்
சிக்கிகொண்டது நானல்லவா?...
அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...//
ஃபீல் பண்ணாதீங்க.
அப்படியெல்லாம் குறிப்பிட்டு எழுதல நந்தா.
சில உணர்ந்தவை
சில கற்பனை...
//அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...//
காபி குடிச்சிட்டு காசு குடுக்காம போய்ட்டு பேச்சைப் பாரு!
//காபிக் கடை நாயர் said...
//அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...//
காபி குடிச்சிட்டு காசு குடுக்காம போய்ட்டு பேச்சைப் பாரு! //
ஏம்பா நாயர்,
நான் இங்க பீலிங்கா எழுதினா...
நீ வந்து காசுகொடுக்கலைனு சொல்றியே!...
//ஏம்பா நாயர்,
நான் இங்க பீலிங்கா எழுதினா...
நீ வந்து காசுகொடுக்கலைனு சொல்றியே//
நீ ஃபீல் பண்ணினது ஓகே!
ஃபீல் பண்ணிகிட்டே காசு குடுக்காம போய் என்னையும் ஃபீல் பண்ண வெச்சிட்டியே!
//கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...
//
ஏண்டா அபிஷ்டு!
கோயிலுக்கு வர்றவாலெல்லாம் உன்னால கோயிலுக்கே வரதில்லை!
என் தட்டு வருமானம் குறையுறது!
நீ நன்னா இருப்பியோ!
சரி சரி ...
அடுத்த தபா வந்து கொடுத்திடரேன்...
//குருக்கள் said...
//கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...
//
ஏண்டா அபிஷ்டு!
கோயிலுக்கு வர்றவாலெல்லாம் உன்னால கோயிலுக்கே வரதில்லை!
என் தட்டு வருமானம் குறையுறது!
நீ நன்னா இருப்பியோ!//
நீர் எந்த கோவில் குருக்கள்...
//காதல் என்று சொல்லமுடியாத
அந்த அழகிய நினைவுகள்//
சொல்றதெல்லாம் சொல்லிட்டு.. சொல்ல முடியாதாமில்ல? :)
Post a Comment