100-வது நாள் கொண்டாட்டம்

நண்பர்களுக்கு வணக்கம்,

எல்லாரும் பிளாக் எழுதுறாங்க அப்படினு நானும் ஒரு வேகத்துல பிளாக் ஆரம்பிச்சு, வணக்கம்னு ஒரு பதிவும், ஒரு கவிதை பதிவும் போட்டாச்சு. அப்புறம் யோசிச்சா என்ன எழுதறதுனு ஒன்னுமே புரியல. சரி நம்ம அண்ணாத்த்கிட்டயே ஐடியா கேட்டுறுவோம்னு சிபி அண்ணாத்தைக்கு போன் போட்டேன்.


அண்ணன் தான் ஐடியா குடுத்த்தாரு. இப்படிதான் ஒன்னுமே புரியாது, அதையும் ஒரு மொக்க பதிவா போட்டிரு, அவ்வளவுதான். இப்படிதான் பிளாக் எழுதனும்னு, ரொம்ப உறுதுணையா நின்னு, முன்னேற உதவி செஞ்சிருக்காரு. அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு இந்த 100-வது நாளில் நன்றி சொல்ல நானும், என் பிளாக்கும் கடமைப்பட்டுள்ளோம்.


அப்புறம் நான் எழுதுனதையும் மதிச்சு, படிச்சு கமெண்ட் போட்ட உங்களுக்கு பெரிய டாங்ஸ். உங்களோட இந்த சப்போர்ட் இருந்தா பின்னாளில் ஒரு வைரமுத்து மாதிரியோ, வாலி மாதிரியோ இல்லாம ஒரு புதுமாதிரியான கவிஞனை எதிர்பார்க்கலாம்.


100 நாள் ஆயாச்சு. ஏதாவது பண்ணனுமே அப்படினு பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சேன். இப்போதைக்கு அதிகம் பேசப்படறது கவிதை, அதுவும் "கொலைவெறிக் கவிதை"னு ஒரு புது வடிவம் வந்திருக்கு. அதில் ஏதாவது பண்ணலாமேனு முடிவெடுத்தேன். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. கொலைவெறி கவிதை எழுத ஒரு கருவி பண்ணினா என்ன?. அதன் பயனாக ஏதோ என்னால் ஆன ஒரு கருவியை இப்போதைக்கு உருவாக்கியுள்ளேன். அது கொடுத்த

சாம்பிள் கவிதை:

எரிச்சலுற்று
உமக்கேது சில்லுகள்
தொடங்குகின்றன வார்
கெக்கெபிக்கே நானும் பாப்பாக்கள்
புகை நெருங்குகின்றனர்
தெக்கியாரைக் வண்டி பார்க்கிறேன்
கடிக்கட்டும் செருப்பு
கொலைவெறி

மூட்டிவிட்டு
தொலைவில் என் கவனத்தைச்
நிழல்களை
வலித்து புகை
கால்வைத்தும்
காமமுமாய் செய்து
மிதித்துப்போட செல்கிறது
சிதறடிக்க வாசல்
எதிர்ப்படுக்கை
வெப்பம் வெப்பம் உரசியபடிச்
தெக்கியாரைக் என்று
பீடியை
கொலைவெறி வாசலுக்கு
பூனனயின் காலாற
பொருக்கியபடியே

என்னை
கால சூழ்ந்து ஒன்றிலிருந்து
சன்னல் எச்சமாய்
உரசல்
வெப்பம் மூட்டிவிட்டு
என்னை
சுழலத் அழைக்கிறேன்
கண்களுக்குள் கொலைவெறி
உரசியபடிச் கத்தியுடன்
மனிதம் எங்கிருக்கிறது
கருப்புப் விளிம்புகளில் பயணம்
எல்லாம் கும்மியை நோக்கியே
!

29 நனைந்தவர்கள்:

நாமக்கல் சிபி said...

100வது நாள் வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//இப்படிதான் ஒன்னுமே புரியாது, அதையும் ஒரு மொக்க பதிவா போட்டிரு, அவ்வளவுதான்//

ஆஹா! இப்படி நம்ம புகழ்(!?) பரப்பதுல எல்லாரும் பாசக்காரப் பயலுவளா இருக்கீங்களே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

J K said...

நன்றிங்கண்ணா!...

//ஆஹா! இப்படி நம்ம புகழ்(!?) பரப்பதுல எல்லாரும் பாசக்காரப் பயலுவளா இருக்கீங்களே!//

ஏன்னா உங்க சேவை இந்த வலையுலகத்துக்கு தேவை.

நாமக்கல் சிபி said...

//ஏன்னா உங்க சேவை இந்த வலையுலகத்துக்கு தேவை//

ஆரம்பிச்சிட்டீங்களா?

:)

ஜேகேவின் பிளாக் said...

//அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு இந்த 100-வது நாளில் நன்றி சொல்ல நானும், என் பிளாக்கும் கடமைப்பட்டுள்ளோம்//

ஆமா! சிபியண்ணாவுக்கு நன்றி!

(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..)

வியப்பவன் said...

ஒரு
பிளாக்கரே
பின்னூட்டம்
போடுகிறதே!

கருத்து கந்தசாமி said...

//கொலைவெறி கவிதை எழுத ஒரு கருவி பண்ணினா என்ன?//

அடப் பாவிகளா! கொலைவெறிக் கவிதை எழுத கருவி வேறயா?

வெளங்குனா மாதிரிதான்!

தமிழ்மணமே! உந்தன் நிலைமை இப்படியா ஆக வேண்டும்!

பாவம்! வாசகர்கள்!

தமிழ்மணம் said...

வேணாம்! விட்டுடு! அழுதுடுவேன்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!

நாமக்கல் சிபி said...

//எரிச்சலுற்று
உமக்கேது சில்லுகள்
தொடங்குகின்றன வார்
கெக்கெபிக்கே நானும் பாப்பாக்கள்
புகை நெருங்குகின்றனர்
தெக்கியாரைக் வண்டி பார்க்கிறேன்
கடிக்கட்டும் செருப்பு
கொலைவெறி
//

கருவி அருமையாத்தாம்லே வந்திருக்கு!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்னு சொல்லுவாங்க!

ஜேகே வோட டாட்.நெட்டும் கவி பாடுது! (கொலை வெறியோட)

நாமக்கல் சிபி said...

//அது கொடுத்தசாம்பிள் //

உக்காந்து யோசிப்பீங்களோ?

:)

புதுக்கவிதைப் பித்தன் said...

இந்த கவிதையின் உட்பொருள் ரொம்ப ஆழமா சிந்திக்க வைக்குது ஜேகே!

பாராட்டுக்கள்!

உங்களுக்கல்ல! உங்கள் மென்பொருளுக்கு!

J K said...

//வியப்பவன் said...
ஒரு
பிளாக்கரே
பின்னூட்டம்
போடுகிறதே! //

நல்ல கவிதை வியப்பவரே!

J K said...

//புதுக்கவிதைப் பித்தன் said...
இந்த கவிதையின் உட்பொருள் ரொம்ப ஆழமா சிந்திக்க வைக்குது ஜேகே!

பாராட்டுக்கள்!

உங்களுக்கல்ல! உங்கள் மென்பொருளுக்கு! //

அஹா!....

கொ.வெ.க.ரசிகர் மன்றம் said...

நிமிடத்திற்கு ஆயிரம் கவிதை வடிக்கும் கருவியைத் தயாரித்த அண்ணன் ஜே.கே வாழ்க!

- கொலை வெறிக் கவிதைகள் ரசிகர் மன்றம்

J K said...

//கொ.வெ.க.ரசிகர் மன்றம் said...
நிமிடத்திற்கு ஆயிரம் கவிதை வடிக்கும் கருவியைத் தயாரித்த அண்ணன் ஜே.கே வாழ்க!

- கொலை வெறிக் கவிதைகள் ரசிகர் மன்றம் //

நன்றி ரசிகர்களே!.

ஆனா இதை நாம் தான் செய்தோம் என்ற எண்ணம் வரக்கூடாது.

இந்த கருவியின் நோக்கம் கும்மி, கும்மி, கும்மி மட்டுமே!

கப்பி பய said...

கொலைவெறி கவிதைகளுக்கு கருவியா?? வெளங்கிரும் :))

J K said...

// கப்பி பய said...
கொலைவெறி கவிதைகளுக்கு கருவியா?? வெளங்கிரும் :)) //

என்ன பண்ணறது கப்பி சார். கடமைனு வந்துட்டா....

ஜி said...

சரி.. போன்லலாம் பேசினாரே.. வந்து பாக்கலாம்னு நெனச்சது குத்தமா? இப்படி போட்டுத் தாக்கிட்டீங்க :((

நூறாவது நாள் வாழ்த்துக்கள் :))

J K said...

நன்றிங்க ஜி.

நம்ம ஊர் பேர காப்பாத்தும்ல.

MSwathi said...

வாழ்த்துக்கள்!கவிதைகள் எல்லாம் அருமை!
100 வது நாள் வாழ்த்துக்கள்!!

நந்தா said...

எல்லாம் ஒரு டைப்பாதான்யா இருக்கீங்க. குஷ்புவுக்குப் பக்கத்தில நாமக்கல் சிபிக்கும் ஒரு க்கொயில் கட்டப் போறதா ஒரு தகவ்ல் வந்திருக்கே உண்மையாவா?????

J K said...

நன்றிங்க சுவாதி...

//நந்தா said...
எல்லாம் ஒரு டைப்பாதான்யா இருக்கீங்க. குஷ்புவுக்குப் பக்கத்தில நாமக்கல் சிபிக்கும் ஒரு க்கொயில் கட்டப் போறதா ஒரு தகவ்ல் வந்திருக்கே உண்மையாவா????? //

அப்படியா!

எனக்கு இந்த மேட்டர் தெரியாதே!...

அதுக்கு ஒரு கொல வெறி கவித போட்டிடலாமா நந்தா?

நந்தா said...

போட்டுடலாமே.கரும்பு தின்ன கசக்குதா.ஒருத்தரை ஏத்தி விட்டு வேடிக்கை பாக்கறதுல இருக்கற சுகமே தனிதான் ஜே.கே.

J K said...

//நந்தா said...
போட்டுடலாமே.கரும்பு தின்ன கசக்குதா.ஒருத்தரை ஏத்தி விட்டு வேடிக்கை பாக்கறதுல இருக்கற சுகமே தனிதான் ஜே.கே. //

அப்படியில்ல நந்தா.

கடமைனு வந்துட்டா.

மகேந்திரன்.பெ said...

நான் லேட்டுஇங்க என்ன என்னமோ நடக்குது

கோமதி said...

இந்த கவிதையை படிச்சி எனக்கு மெய்யாலுமே கொலை வெறி உண்டாயிட்டுது. அதனால் என்னுடைய கணினி விசைப்பலகைதான் ரொம்ப கஷ்டப்பட்டுச்சி.

ஜே.கே வுக்கு 100 வது நாள் வாழ்த்துக்கள்.

J K said...

வாங்க மகேந்திரன்.

பயப்படாம வாங்க.

நன்றி கோமதி.

எல்லாருமே இப்படிதான் கொலவெறியோட இருக்காங்க. நான் மட்டும் என்ன பண்ண?

கோவி.கண்ணன் said...

நாமக்கல் சிபியை தலைவராக கொண்ட பதிவுலக மொக்கையர் சங்கம் உங்களை உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டு வரவேற்கிறது.

வருக ! வருக !

இவண்,
இணை செயலாளர் மொக்கையர் சங்கம்

J K said...

சங்கத்துல சேத்துகிட்டதுக்கு நன்றிங்க...