என்னோட எட்டு

பிரியா மற்றும் தேவ் ஆகியோரின் பாசமான(?!) அழைப்பை ஏற்று நானும் எட்டு போடறேன்.

திடீர்னு, நம்மள பத்தி எட்டு பெருமையான விசயங்கள் சொல்ல சொன்னதும் கொஞ்சம் தடுமாறிப்போயிட்டேன். கண்ணகட்ட ஆரம்பிச்சிடுச்சு. அப்புறம் சோடா குடிச்சுட்டு, தெளிவாயிட்டு யோசிச்சா ஒன்னுமே தேரல. கஷ்டப்பட்டு எட்டு விசயங்கள் கண்டுபிடிச்சிருக்கேன், படிச்சு தெரிஞ்சுக்குங்க...

1. எனக்கு அதிகம் நண்பர்கள் அப்படினு சொல்லிக்கனும்னு ஆசைதான். ஆனா என் நட்பு வட்டம் சின்னதுதான். எல்லோரையும் நண்பர்களா என்னால ஏத்துக்க முடியல. நம்ம அலைவரிசைக்கு யாரெல்லாம் ஒத்து வற்றாங்களோ (முன்ன், பின்ன்), அப்படி கொஞ்சம் யோசிக்கிறதுனால நண்பர்கள் எண்ணிக்கையில் குறைவு. எண்ணிக்கை முக்கியமில்லை, எப்பவுமே உண்மையான நண்பர்களா இருக்கனும் அப்படினு நினைக்கிறேன். நண்பர்கள் என்பதே பெருமை பட வேண்டிய விசயம் தானே!

2. அப்பப்ப இந்த நேர்மை குணம் வந்து படுத்தற பாடு நம்மால தாங்க முடியல. எல்லா நேரத்திலையும் நான் நேர்மையா இருக்கேனு சொல்ல முடியாது, சில சமயங்கள்ல நேர்மையா இருக்கனும் அப்படினு ரொம்ப உறுதியா, நேர்மையா செயல்படுவேன். யாருமே இல்லாத ரோட்டுல சிக்னல் போட்டிருக்குனு, கிராஸ் பண்ணாம நின்னுட்டிருப்பேன். எப்பவாதும் அதை நினைச்சு பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும்.

3. இப்படிதான் கவிதை எழுதுறேன் அப்படினு கொஞ்ச பேர்த்த (அதாங்க நம்ம நண்பர்களை) கொடுமை படுத்திகிட்டு இருக்கேன். சிலர் படிச்சுட்டு விதி நொந்துகிட்டு "சூப்பர்" அப்படினுட்டு போவாங்க. சிலர் ஒன்னும் சொல்றதில்லை. அவங்கள்லாம் ஒன்னா சேந்து அடிக்கப் போறதா சிலர் சொன்றாங்க.(கொஞ்சம் பயமாதான் இருக்கு). அடிவாங்கினாலும் நாம் கவுஜர் அப்படிங்கறது பெருமைபட விசயம் தானே!

4. அப்பா, அம்மாவுக்கு ரொம்ப நல்ல பிள்ளை நான். அத பண்ணாத, இத பண்ணாத அப்படினு கட்டுபாடுகள் போட்டு வளர்க்கப்படுகிற பிள்ளைகளுக்கு மத்தியில், எங்க வீட்ல கட்டுபாடுனு எதுவும் கிடையாது. என்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க. ஒரு சிலர் அவங்க வீட்டைபற்றி சொல்லும் போது நமக்கு இவ்வளவு சுதந்திரம் அப்படினு ரொம்ப பெருமையா இருக்கு.

5. எதையும் கொஞ்சம் சீக்கிரமா நம்பிடுவேன். இதனால சில சமயம் ஏமாந்தும் போயிருக்கேன்.

6. என்னால எதையும் மறைச்சு வைக்க முடியாது. சீக்கிரமாவே உளறிடுவேன். சாதாரணமா சொன்ன விசயத்த மறந்துடுவேன். ஆனா யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொன்ன மேட்டர் தான் மொதல்ல நம்ம ஞாபகத்துக்கு வரும். வார்த்தைக்கு வார்த்த அதான் வந்து நிக்கும். கடைசில சொல்லிட்டுதான் அய்யய்யோ சொல்லிட்டமேனு நினைப்பேன்.

7. நாட்டுக்கு பெரிய தொண்டு செய்யனும் அப்படினு எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. ஆனா நாம் பிறந்த ஊருக்கு, நாம் இங்கு தான் இருந்தோம் எனும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே வருகிறது. இப்படி ஒரு எண்ணம் தோன்றியதே பெருமை தானே!

8.கடைசியா, அதாங்க எட்டாவதா, நான் பிளாக் எழுதினதே ஒரு பெருமையாதான் நினைக்கிறேன். பிளாக் எழுதலைனா இவ்ளோ(?!) நண்பர்கள் கிடைச்சிருப்பீங்களா?.

எட்டு போட:

1.
நந்தா

2.
இம்சை அரசி

3.
கமல்

4.
ஜி

5.
இராம்

6.
கோவி. கண்ணன்

7.
பாலா

8.
நாமக்கல் சிபி


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.


2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

பி.கு: இதுபோல் விளையாட்டை ஆரம்பிப்பவர்கள் 2,3 இது போல் சிறிய எண்ணாக கொடுக்கவும். அப்பாடி இந்த 8 முடிப்பதற்குள் .....அம்மாடியோவ் நம்மால முடியாது சாமி...

10 நனைந்தவர்கள்:

Anonymous said...

Nice o nice ;)

paarthen rasithen

கோவி.கண்ணன் said...

என் கூட பல நாள் பழக்கமோ?

:)

ஓ! பெசண்ட் நகர்ல சந்திச்சோம்ல! மறந்துடுச்சு!

ஜி said...

அருமை.. எளிமையா (Simpleக்கு இப்படித்தானே தமிழ்ல சொல்லணும் ;)) எழுதிருக்கீங்க..

கோவி.கண்ணன் said...

ஜேகே,

மேலே என்பெயரில் போடப்பட்டுள்ள பின்னூட்டம் நான் போட்டது அல்ல.

கப்பி பய said...

//யாருமே இல்லாத ரோட்டுல சிக்னல் போட்டிருக்குனு, கிராஸ் பண்ணாம நின்னுட்டிருப்பேன். எப்பவாதும் அதை நினைச்சு பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும்.
///

அட நம்மாளு :))

ஜி சொன்ன மாதிரி அருமை! எளிமை!!

கப்பி பய said...

//ஓ! பெசண்ட் நகர்ல சந்திச்சோம்ல! மறந்துடுச்சு! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

J K said...

நன்றிங்க பிரியா!

நந்தா said...

எட்டு மாதிரியே தெரியலையே. ஏழரை மாதிரின்னா இருக்கு. சரி நீங்க போட்டுட்டீங்க. என்னை எதுக்கு ஓய் கோர்த்து விட்டீரு. ஏதாவது உருப்படியா செஞ்சிருந்தா எழுதலாம்.

4 நாளா யோசிச்சும் தூக்கம் கெட்டதுதான் மிச்சம். சரி மத்தவங்க எல்லாம் 8 போடுவாங்க இல்லை. அதுல இருந்து ஒவ்வொண்ணை எடுத்து போட்டுடறேன்.

உங்க எட்டு பாஸாயிடுச்சு. நீங்க தாராளமா லைசென்ஸ் எடுத்துக்கலாம்.

J K said...

வாங்க ஜி சார்.

//அருமை.. எளிமையா (Simpleக்கு இப்படித்தானே தமிழ்ல சொல்லணும் ;)) எழுதிருக்கீங்க.. //

அப்படிங்களா?

ரொம்ப நன்றிங்க...

கப்பி சார்.

நம்ம பெசண்ட் நகர் மேட்டர் யாருக்கோ தெரிஞ்சிருக்கு...

அது காருக்குள்ள இருந்த ஆளா இருக்குமோ?..

J K said...

லைசன்ஸ் கொடுத்ததுக்கு டாங்ஸ் நந்தா.

//என்னை எதுக்கு ஓய் கோர்த்து விட்டீரு.//

ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி.