இராஜ ராஜ சோழன் நான்
நான் ஆண்ட தஞ்சை தேசம் தான்


சென்ற வாரம் அலுவலக நண்பரின் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றோம். அப்படியே தஞ்சை பெரிய கோவில் மற்றும் அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு வந்தோம். அதன் சில தகவல்கள் மற்றும் கிளிக்கிய புகைப்படங்கள்.

கோவில் நடையை மதியம் 1.00 மணிக்கு மூடி மாலை 4.30 க்கு தான் திறக்கிறார்கள்.

சாலையிலிருந்து முகப்புகோவிலின் முன்புறம் கால்வாய் அமைப்பு
முன்பு கால்வாயாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது குப்பைகள் கொட்டத்தான் இதை பயன்படுத்துகிறார்கள் போல. இதை செப்பனிட்டு பராமரித்தால் கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.

கோவில் கட்டியதன் விளக்கப்படம்

இதை கோவிலின் முகப்பு வாயிலிலேயே விளக்கப்படமாக வரைந்து வைத்துள்ளார்கள்.


பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நந்தி

குதிரை மற்றும் வெள்ளி யாணை வாகனம்


நந்திக்கு வலப்புறம் உள்ள அம்மன் கோவில்
பெரிய நந்திகோவிலின் முன்புறம் நிறுத்தி மன்னிக்கவும் கட்டி வைத்திருந்த யாணை. ஆசிர்வாதம் என்ற பெயரில் யாணையை காசு வாங்க வைக்கிறார்கள்.இரும்புக்குண்டுகள் (கோவிலில் ஒரு மாடத்தினுள் இருந்தது)
அடி தளத்திலிருந்தே கல்லில் சித்திர வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. உற்று நோக்கினால் தான் தெரிகிறது ஒவ்வொரு சிறிய கல்லிலும் ஒவ்வொரு சித்திரம்.
பின்புறமிருந்து கோபுரம்

கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், வலப்புறம் பார்த்து உள்ளது, இடப்புறம் பார்த்து உள்ளது இரண்டுக்கும் சிறு வித்தியாசம் கூட நம்மால் காண முடியாது.

கோவிலில் நான் தெரிந்துகொண்ட ஒரு செய்தி, கோபுரத்தின் நிழல் கீழே விழுமாம், அதில் உள்ள கலசத்தின் நிழல் தான் கீழே விழாது என்று சொன்னார்கள்.

நம்ம ஊர் மக்கள் இதை மற்ற கோவில்களைப் போல்தான் வந்தோமா, வணங்கினோமா சென்றோமா என்று இருக்கிறார்கள். அதில் உள்ள சிற்ப்பங்கள், கட்டிக முறை, ஆகியவற்றை காண்பது இல்லை.

இப்போது கோவிலில் ஆங்காங்கே பல கற்றகள் உடைந்து இருப்பதை காணமுடிகிறது. பராமறிப்பு பணிகளும் நடக்கின்றன. ஆனாலும் கோவிலின் பொலிவு குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

(தொடரும்...)

24 நனைந்தவர்கள்:

அபி அப்பா said...

நல்லா இருக்கு ஜெயகுமார்! அருமையான படங்கள்! என்ன ஒற்றுமை நான் கூட எங்க ஊர் கோவில் பத்தின பதிவு போட்டிருக்கேன், நீங்களுமா!

செந்தழல் ரவி said...

பதிவும் படங்களும் அருமை...நான் கூட எங்க ஊர் கோவில் பற்றி எழுதனும்...போட்டோக்களோட...என்ற உந்துதல் வருது...

கோவி.கண்ணன் said...

தஞ்சைக்கு சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்துக்கிறது, பதிவும் படங்களும்,

பாராட்டுக்கள் ஜெயா !

நந்தா said...

ஏற்கனவே உடையாரைப்படிக்க படிக்க படிக்க பெரிய கோயிலைப்பற்றி ஒரு விதமான மரியாதை ஏற்பட்டிருந்தது.

பதிவைப் பார்த்தவுடன் மீண்டும் ஒரு முறை இந்த கோயிலுக்கு போய் விட்டு வர வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது. படங்கள் மிக அருமை.

J K said...

வாங்க அபி அப்பா.

உங்க கோவில் பதிவில் புகைப்படம் இருந்தா போடுங்க.

// செந்தழல் ரவி said...
பதிவும் படங்களும் அருமை...நான் கூட எங்க ஊர் கோவில் பற்றி எழுதனும்...போட்டோக்களோட...என்ற உந்துதல் வருது... //

எழுதுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

J K said...

நன்றிங்க கோவி.கண்ணன்.

J K said...

//நந்தா said...
ஏற்கனவே உடையாரைப்படிக்க படிக்க படிக்க பெரிய கோயிலைப்பற்றி ஒரு விதமான மரியாதை ஏற்பட்டிருந்தது.

பதிவைப் பார்த்தவுடன் மீண்டும் ஒரு முறை இந்த கோயிலுக்கு போய் விட்டு வர வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது. படங்கள் மிக அருமை. //

நீங்க சொல்வதும் உண்மைதான் நந்தா. உடையார் படிச்சிட்டு போனா நிறைய விசயங்கள் கவணிக்க தோனுது. இன்னும் அதில் சில விசயங்களை குறிப்பெடுத்துக்கொண்டு போனால், நாம் அதை தவறவிடாமல் பாக்கலாம்னு நினைக்கிறேன்.

இராம் said...

JK,

போட்டோஸ் எல்லாம் அருமையா இருக்கு... ;)

தம்பி said...

இதுவரைக்கும் நீங்க ஒரு புலவர்னுதான் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா சிறந்த போட்டோகிராபர்னு இப்பதான் தெரியுது.

கப்பி பய said...

அட நீங்களும் போட்டோகிராபர் ஆயிட்டீங்களா :)))

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டுல ஒரு லஸ்ஸி கடை இருக்கும்..அங்க லஸ்ஸி அடிச்சீங்களா?? ஜூப்பரா இருக்கும்..

வெங்கடேஷ் வரதராஜன் said...

//கோவிலின் முன்புறம் நிறுத்தி மன்னிக்கவும் கட்டி வைத்திருந்த யாணை. ஆசிர்வாதம் என்ற பெயரில் யாணையை காசு வாங்க வைக்கிறார்கள்// this is the case with most of the temple elephants.... Big Temple is no exception. The irony is - at a stone's throw distance from the Temple is the office of SPCA (Society for Prevention of Cruely to Animals).. while you turn towards the bridge/medical college road from Periya Koil.


However, thanks for these nice pics, which not only speaks about the Cholan architectural splendour, but also triggers my nostalgic past :)

ஜி said...

arumaiyaana padangal

குசும்பன் said...

எங்க ஊர் கோவிலை பற்றி எழுதி இருப்பதில் மகிழ்ச்சி, நன்றாக இருக்கிறது அனைத்து படங்களும்.

யாத்திரீகன் said...

nice pictures.. i've got some more of them..

http://yaathirigan.blogspot.com/2007/05/blog-post.html

http://yaathirigan.blogspot.com/2007/05/2.html

http://yaathirigan.blogspot.com/2007/05/3.html

J K said...

நன்றிங்க ராம் அண்ணா!

J K said...

//தம்பி said...
இதுவரைக்கும் நீங்க ஒரு புலவர்னுதான் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா சிறந்த போட்டோகிராபர்னு இப்பதான் தெரியுது.//

அப்படிங்களா! ரொம்ப சந்தோசங்க!.

J K said...

// கப்பி பய said...
அட நீங்களும் போட்டோகிராபர் ஆயிட்டீங்களா :)))

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டுல ஒரு லஸ்ஸி கடை இருக்கும்..அங்க லஸ்ஸி அடிச்சீங்களா?? ஜூப்பரா இருக்கும்.. //

எல்லோரும் படம் போட்டாங்க. நாம மட்டும் சும்மா இருந்தா நல்லாயிருக்குமா? வரலாறுல இதெல்லாம் ரொம்ப முக்கியம்.

லஸ்ஸி கடை மேட்டர் (பழைய பஸ்டாண்டா? புது பஸ்டாண்டா?) எனக்கு தெரியாது, அடுத்த தடவ போகும் போது கண்டிப்பா அடிச்சிட்டு வரேன்.

J K said...

நீங்க சொல்வது உண்மைதான் வெங்கடேஷ் வரதராஜன்.

J K said...

// ஜி said...
arumaiyaana padangal //

நன்றிங்க ஜி அண்ணா!

// குசும்பன் said...
எங்க ஊர் கோவிலை பற்றி எழுதி இருப்பதில் மகிழ்ச்சி, நன்றாக இருக்கிறது அனைத்து படங்களும். //

நம்ம ஊர்தானா குசும்பன் சார். வீடு எங்க இருக்குனு சொன்னா அடுத்த முறை வருவோம்ல.

J K said...

நன்றிங்க யாத்திரீகன்.

இன்னும் சில அரண்மனையில் எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன. அதை அடுத்த் பதிவில் இடுகிறேன்.

SurveySan said...

எல்லா புகைப்படங்களும் போடுங்க சாரே.

நான் போகும்போது, நல்ல கேமரா கொண்டு போகல. பிக் மிஸ்டேக் :(

J K said...

// SurveySan said...
எல்லா புகைப்படங்களும் போடுங்க சாரே.

நான் போகும்போது, நல்ல கேமரா கொண்டு போகல. பிக் மிஸ்டேக் :( //

அடுத்த முறை நல்ல கேமரா எடுத்துட்டு போங்க. ஒரு நாள் முழுவ்தும் ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கலாம்.

ஜோதிபாரதி said...

தஞ்சாவூரையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்.

உஙகள் வலைப்பூ மனம் வீச வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜோதிபாரதி

Vassan said...

நல்ல படங்கள்.

// கோவிலின் முன்புறம் கால்வாய் அமைப்பு
முன்பு கால்வாயாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது குப்பைகள் கொட்டத்தான் ..//


இது கால்வாய் அன்று. முற்காலத்தில் அகழியாக இருந்தது.