இராஜ ராஜ சோழன் நான்
என் தஞ்சை அரண்மனை

அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள அமைப்பு விளக்கப்படம்
மணி மண்டபம்
மணி மண்டபம் சுற்றி சுற்றி கட்டப்பட்டுள்ள முறை அழகாக இருக்கிறது. அந்த சிறிய படிகட்டில் நாம் செல்வதே சிரமமாக உள்ளது, அப்போது அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது வியப்பாக உள்ளது.
சத்திரபதி சிவாஜியின் காசுகள்

தம்புரா மற்றும் வீனை
தர்பார் ஹாலில் மேற்கூரை வண்ண ஓவியங்கள்

தர்பார் மஹால் பெரியதாக உள்ளது. மேற்கூரையில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இவை சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது, நிறைய ஓவியங்கள் அழிந்தும், அழிந்துகொண்டிருப்பதையும் காண முடிகிறது.
மணி மண்டபம் முன் இருந்த சிலை
மணி மண்டபத்திலிருந்து பெரிய கோவில்
அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறியவர்க்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ.10, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ புகைப்படம் ரூ.150 என பணம் வசூலிக்கிறார்கர்கள். இதையே ஒரு அரண்மனையின் பல இடங்களில் வசூலிப்பதுதான் கொடுமையாக இருக்கிறது.

அரண்மனை கட்டிட அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. சில பகுதிகள் மட்டுமே பராமறிக்கப்படுகின்றன. சில பகுதிகள் செப்பனிடப்படுகின்றன. பல பகுதிகள் கேட்பாரற்று கிடக்கிறது. தர்பார் ஹால் கூட பராமரிக்கப்படுவதில்லை. இப்படியே சென்றால் பாதி பாழடைந்த நிலையில் இருக்கும் அரண்மனை இன்னும் சிறிது காலத்தில் அழைந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

அரண்மனையில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. ஆனால் 4,5 படிகளே அதில் இறங்கி பார்க்க முடிகிறது. அதற்கு மேல் உள்ளே செல்ல முடிவதில்லை. வெளிச்சம் இல்லாமலும், பராமறிக்கப்படாமலும் இருக்கிறது.

23 நனைந்தவர்கள்:

இராம் said...

JK,

போட்டோஸ் எல்லாம் அருமையா இருக்கு......


புகைப்பட போட்டிக்கு பேரு கொடுத்தாச்சா????

அபி அப்பா said...

அருமையான விளக்கத்துடன் கூடிய புகைப்படங்கள்!

குசும்பன் said...

"அதற்கு மேல் உள்ளே செல்ல முடிவதில்லை. வெளிச்சம் இல்லாமலும், பராமறிக்கப்படாமலும் இருக்கிறது. "

வவ்வால் கக்கா ஸ்மெல் அடிச்சு ஓடி வந்து இருப்பீங்களே!!!

மற்ற ஊர் அரண்மனை பராமரிப்பை பார்த்து விட்டு, இதையும் பார்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது என்ன செய்வது...:(

J K said...

நன்றிங்க ராம்.

//புகைப்பட போட்டிக்கு பேரு கொடுத்தாச்சா???? //

இன்னும் பேர் கொடுக்கல...

இனிதான் கொடுக்கனும்...

J K said...

// அபி அப்பா said...
அருமையான விளக்கத்துடன் கூடிய புகைப்படங்கள்!//

நன்றிங்க அபி அப்பா.

J K said...

// குசும்பன் said...
"அதற்கு மேல் உள்ளே செல்ல முடிவதில்லை. வெளிச்சம் இல்லாமலும், பராமறிக்கப்படாமலும் இருக்கிறது. "

வவ்வால் கக்கா ஸ்மெல் அடிச்சு ஓடி வந்து இருப்பீங்களே!!!

மற்ற ஊர் அரண்மனை பராமரிப்பை பார்த்து விட்டு, இதையும் பார்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது என்ன செய்வது...:( //

ஆமாங்க குசும்பன் சார்.

சரி சுரங்கப்பாதை எப்படியெல்லாம் இருக்கும்னு பாக்கலாமுனு நினைச்சு இறங்கிப்போனா, நினைக்கவே வருத்தமா இருக்கு...

MSwathi said...

படங்கள் அழகாக இருக்கின்றான. நான் 1989ல் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குப் போன போது சுற்ற வர புதர் மண்டிக் கிடந்தது. பராமரிப்பு இல்லாமல் அந்தப் பழம் பெருமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு ஒன்று தன்னுடைய அருமைகளை இழந்து கிடந்தது. இப்போதும் அப்படியா?

J K said...

//புதர் மண்டிக் கிடந்தது. பராமரிப்பு இல்லாமல் அந்தப் பழம் பெருமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு ஒன்று தன்னுடைய அருமைகளை இழந்து கிடந்தது//

இப்போது புதரெல்லாம் இல்லை. ஆனால் அதன் பொலிவு குறைந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கோவி.கண்ணன் said...

ஜெயா...

இந்த தொகுப்பும், படங்களும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. ஆவணப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அடடா... படங்கள் ரொம்ப அருமையா வந்திருக்கு. உங்க படம்பிடிக்கும் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.

பலமுறை தஞ்சை சென்றும் கூட இந்த இடங்களை பார்க்காதது என்னவோ போலிருக்கிறது. :(

செந்தழல் ரவி said...

இல்ல...ஒத்துப்பு கிடையாது...இது பயணக்கட்டுரை...

நான் தான் ஜெயிப்பேன்..ஆட்டத்தை கலைப்பேன்..

J K said...

நன்றிங்க கோவி.கண்ணன்.

J K said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
அடடா... படங்கள் ரொம்ப அருமையா வந்திருக்கு. உங்க படம்பிடிக்கும் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.

பலமுறை தஞ்சை சென்றும் கூட இந்த இடங்களை பார்க்காதது என்னவோ போலிருக்கிறது. :( //

வாங்க தல...

நன்றிங்க தல...

நீங்க அரண்மனையே போனதில்லையா?. என்னதல போங்க...

J K said...

// செந்தழல் ரவி said...
இல்ல...ஒத்துப்பு கிடையாது...இது பயணக்கட்டுரை...

நான் தான் ஜெயிப்பேன்..ஆட்டத்தை கலைப்பேன்.. //

என்ன சார்...

இப்படி சம்பந்தமே இல்லாம ஒரு கமெண்ட்...

பாரதிய நவீன இளவரசன் said...

// தர்பார் மஹால் பெரியதாக உள்ளது. மேற்கூரையில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இவை சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது, நிறைய ஓவியங்கள் அழிந்தும், அழிந்துகொண்டிருப்பதையும் காண முடிகிறது.
//

i really wonder how you managed to take that wonderful picture inside the darbar hall... photography seems to be prohibited... thats what the hanging board displays..right?

anyhow, all pics are nice. Good post, indeed.

தேவ் | Dev said...

படங்கள் அருமையா வந்துருக்குய்யா... நல்லாயிருக்கு

J K said...

//பாரதிய நவீன இளவரசன் said...

i really wonder how you managed to take that wonderful picture inside the darbar hall... photography seems to be prohibited... thats what the hanging board displays..right?

anyhow, all pics are nice. Good post, indeed. //

நன்றிங்க பாரதிய நவீன இளவரசன்.

தர்பார் ஹாலில் புகைப்படம் எடுக்க அனுமதி உள்ளது. ஆனால் 2,3 இடங்களில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் அங்கு சரியான பராமறிப்பு இல்லாததால் யாரும் செல்வதுமில்லை. புகைப்படம் எடுக்க விரும்புவதுமில்லை.

J K said...

// தேவ் | Dev said...
படங்கள் அருமையா வந்துருக்குய்யா... நல்லாயிருக்கு //

நன்றிங்க தேவ்.

துளசி கோபால் said...

அடடா............. தஞ்சாவூர் அரண்மனை பார்க்க அழகா இருக்கே. நான் இதுவரை
ரெண்டுமுறைதான் அந்த ஊருக்கு வந்துருக்கேன். ஆனா அரண்மனையைப் பார்க்கத்
தோணலையே(-:

அழகான படங்கள்.

நன்றிங்க.

J K said...

நன்றிங்க துளசி கோபால்.

நான் கூட முழுமையா பாக்கல. பாதி இடங்கள் பார்க்க அனுமதியில்லைனு போட்டிருக்கு.

பழூர் கார்த்தி said...

நல்ல புகைப்படங்கள்.. நான் ஒருமுறை சென்றிருந்தாலும் எல்லா இடங்களுமே புதிதாய் பார்ப்பது போல் இருக்கிறது..

<<>>

// பராமறிக்கப்படாமலும் இருக்கிறது.//
'பராமறிக்க' அல்ல, 'பராமரிக்க'

<<>>

தொடர்ந்து கலக்குங்கள்...

J K said...

நன்றிங்க கார்த்தி அண்ணா...

//பழூர் கார்த்தி said...

// பராமறிக்கப்படாமலும் இருக்கிறது.//
'பராமறிக்க' அல்ல, 'பராமரிக்க'

<<>>

தொடர்ந்து கலக்குங்கள்... //

மாற்றிவிட்டேன்.

SurveySan said...

good good good.