முடிவு தரும் மரணம்


என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.

தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...

அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.

மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

11 நனைந்தவர்கள்:

கோவி.கண்ணன் said...

ஜெயா,

இந்த கவிதை தேவையா ? தேவை இன்றியா ?

:)

VSK said...

வாழ்த்துகள்!

கவிதைக்கும், தேடலில்லாத் தேவையில்லா நேரம் கிட்டவும்!

நாமக்கல் சிபி said...

கலக்குறீங்க ஜேகே!

ஃபினிசிங்க் டச் சூப்பர்!

//ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்//

ம்ம்! பெரிய விஷயமா எழுதி இருக்கீங்க!

பாராட்டுக்கள்!

J K said...

// கோவி.கண்ணன் said...
ஜெயா,

இந்த கவிதை தேவையா ? தேவை இன்றியா ?

:) //

தேவை இல்லாத தேடலாக..

:))

J K said...

நன்றிங்க VSK

J K said...

நன்றிங்க சிபி அண்ணா!

நாமக்கல் சிபி said...

படமும் சூப்பர்!

பித்தானந்தா said...

//நான்
J K
எப்போதும், நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்... //நீ
நீயாக
இரு!

நான்
நானாக
இருக்கிறேன்!

நாம்
நாமாகவே
இருப்போம்!

இவர்கள்
இவர்களாகவே
இருக்கட்டும்!

அவர்கள்
அவர்களாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்!

http://pithanantha.blogspot.com/2007/07/001.html

J K said...

வாங்க பித்தானந்தா ஜி....

வணக்கம்.

உங்க அருள் இந்த சிஷ்யனுக்கு எப்பவும் தேவை.

Anonymous said...

மிக அழகான வரிகள். நல்ல வார்த்தை பலம். j.k என்றொரு சிந்தனையாளர் இருந்தாரே அவர் நினைவாகவா இந்தப்பெயர்??

அருட்பெருங்கோ said...

தேடல் இல்லாத வாழ்வை தேடிக்கொண்டிருக்கிறீர்களோ? ;)