விடாது சரக்கு...

உன்னைத் தேடி
எப்போதும்
என் பயணம்
அமைவதில்லை
வழியில் காணும் போது
உனக்காக
காரணம் அமைத்து
நுழைகிறேன் உள்ளே!


இதுதான் வேண்டுமென்று
எப்போதும் சொன்னதில்லை
இருப்பதை வைத்து
சந்தோசப்படும் மனம்
இங்கு மட்டுமே!


ஒத்துக்கொள்ளாத போது
போன வேகத்தில்
வெளியே வந்தாலும்
ஏற்றுக்கொள்கிறேன்
சுயநினைவில்லா
சுரணையோடு....


காலம் கடக்கும் வேளையில்
விரட்டப்பட்டு
இருப்பிடம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்
தள்ளாடியபடியே
டாஸ்மார்க்கிலிருந்து.....

15 நனைந்தவர்கள்:

முதல் குடிமகன் said...

மீ த பர்ஷ்த்ழு!

நாமக்கல் சிபி said...

//வழியில் காணும் போது
உனக்காக
காரணம் அமைத்து
நுழைகிறேன் உள்ளே!
//

கரெக்டுதான்!

//இதுதான் வேண்டுமென்று
எப்போதும் சொன்னதில்லை
இருப்பதை வைத்து
சந்தோசப்படும் மனம்
இங்கு மட்டுமே!
//

முற்றிலும் உண்மை!
ஆமா ஆமா!

//ஒத்துக்கொள்ளாத போது
போன வேகத்தில்
வெளியே வந்தாலும்//

வாந்தியா ஜேகே?

//காலம் கடக்கும் வேளையில்
விரட்டப்பட்டு
இருப்பிடம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்
தள்ளாடியபடியே
டாஸ்மார்க்கிலிருந்து..... //

நைட்டு ஒரு மணி வரை கடைக்குள்ளயே உக்காந்திருந்தா ஏன் விரட்ட மாட்டாங்க?

இராம் said...

ஏலேய்,

அன்னிக்கு வடபழனி சிக்னல் பக்கத்திலிருக்கிற ஜீஸ் கடையிலே சும்மாதானே ஒட்கார்ந்துருந்தே??

இப்போ கவிஜ'லாம் எழுதுறே???

இராம் said...

எங்க மேன் என்னோட பின்னூட்டம்???

J K said...

//முதல் குடிமகன் said...
மீ த பர்ஷ்த்ழு!
//

வாங்க குடிமகனே... வாங்க...

உங்க கடமைய நெனைச்சா புல்லறிக்குது போங்க.

J K said...

நாமக்கல் சிபி said...

////காலம் கடக்கும் வேளையில்
விரட்டப்பட்டு
இருப்பிடம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்
தள்ளாடியபடியே
டாஸ்மார்க்கிலிருந்து..... //

நைட்டு ஒரு மணி வரை கடைக்குள்ளயே உக்காந்திருந்தா ஏன் விரட்ட மாட்டாங்க? //

இல்லீங்க மொட்ட மாடில இருந்தாலும் விட மாட்டேன்றாங்க.

J K said...

// இராம் said...
ஏலேய்,

அன்னிக்கு வடபழனி சிக்னல் பக்கத்திலிருக்கிற ஜீஸ் கடையிலே சும்மாதானே ஒட்கார்ந்துருந்தே??

இப்போ கவிஜ'லாம் எழுதுறே??? //

சும்மா ஒட்கார்ந்து இருந்தாலும் எப்படி கரெக்டா கவுஜ எழுதினோமில்ல..

J K said...

// இராம் said...
எங்க மேன் என்னோட பின்னூட்டம்??? //

அதான் வந்துடுச்சில்ல...

நாமக்கல் சிபி said...

பரபரப்புச் செய்தி தந்தது யா'ராம்'? என்று கேட்பவர்கள் இங்கே வந்து படித்து தெரிந்து கொள்ளவும்!

நாமக்கல் சிபி said...

விடாது சரக்கு!

தலைவா! தலைப்பே சும்மா கிர்ருன்னு ஏறுதே!

கோவி.கண்ணன் said...

கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து கள்ளு குடிச்ச கிக்கு !

ILA(a)இளா said...

What is Tasmark yaar?
is it like Pass Mark? Then why you write this kind of Poem's, I can't even understand what you are talking about.

ILA(a)இளா said...

மப்பு கொஞ்சம் ஜாஸ்தியா போனா இப்படிதான் ராம் உளறுவாருங்கிறதுக்கு ஒரு சின்ன உதாரணமே இது..

J K said...

// கோவி.கண்ணன் said...
கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து கள்ளு குடிச்ச கிக்கு ! //

சிலர் கிக்கால் வந்ததுதான் இந்த கவுஜை...

J K said...

// ILA(a)இளா said...
What is Tasmark yaar?
is it like Pass Mark? Then why you write this kind of Poem's, I can't even understand what you are talking about. //

ஒரு நிமிசம் அடிச்ச கிக்கு எல்லாம் எறங்கிடுச்சு..


// ILA(a)இளா said...
மப்பு கொஞ்சம் ஜாஸ்தியா போனா இப்படிதான் ராம் உளறுவாருங்கிறதுக்கு ஒரு சின்ன உதாரணமே இது.. //

ஓ!!!
அப்படியா!

வெளக்கமா சொன்னாதான வெளங்கும்.