நீ நல்லவனில்லை

நீ நல்லவனில்லை
என்னை மன்னித்துவிடு.
நீ
நல்லவனில்லை என்பது
எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றி
நீ
என்ன நினைத்தாலும்
உண்மையை
உள்ளபடியே கூறப்போகிறேன்.

உன்னுடையதா
இந்த சமூகமா
இல்லை பருவமா
யாருடைய தவறு என்று
சரியாகத் தெரியவில்லை...

பெண்ணை
பெண்ணாக அல்லாமல்
போதையாகவும்
காமமாகவும்
பார்க்கும் கண்கள்...

பார்க்கும் நொடியிலேயே
என் முகம் தொடங்கி
செவ்விதழ்
கழுத்து
மார்பு
இடை
முழங்கால் என
பாதம் வரை மேய்ந்துவிடுகிறது
உன் கழுகுப் பார்வை...

இதில் எப்படி,
என்னை மட்டும் நீ
பெண்ணாக பார்ப்பது.

உன்னைப் பற்றி
முழுமையாக தெரியாவிட்டாலும்
இதையாவது தெரிந்துகொண்டேன்.

எனக்குத் தெரியும்
நீ நல்லவனில்லை...

4 நனைந்தவர்கள்:

கமல் ராஜன்.பா said...

எனக்கு மிகயும் பிடித்த கவிதை ஜெயா.. வாழ்த்துக்கள்.. தளத்தில் ஒவ்வொன்றும் மிக அருமை..

J K said...

நன்றி கமல்.

பிரியா said...

பெண்மையின் புலம்பல்களை
மிகவும் அழகாய் சொல்லியிருங்க

வாழ்த்துக்கள்

J K said...

நன்றி பிரியா.