மழைக் காதல்

என் காதல்
அன்றொருநாள்
மழைக்காக
நிழற்க்குடையில்
நான் ஒதுங்கி நிற்க...
ஒற்றைக்குடையுடன்
வந்த நீ
இதை எடுத்துச் செல்
என நீட்டினாய்
குடையுடன் சேர்த்து
உன் காதலையும்...

அதை
மடக்கிவைத்துக்கொண்டு
உன்னுடன் நானும்
நனைந்தே வந்தேன்
என் காதலை
சொல்லும் விதமாக...

4 நனைந்தவர்கள்:

நாமக்கல் சிபி said...

கவிதை மிகவும் அழகு!

//அதை
மடக்கிவைத்துக்கொண்டு
உன்னுடன் நானும்
நனைந்தே வந்தேன்
என் காதலை
சொல்லும் விதமாக...
//

சூப்பர்!

(அதுசரி! ஒற்றைக் குடையிலேயே இருவரும் நனையாமல் சென்றிருக்கலாமே! ஓ! காதல் சாரல் என்றால் நனையத்தான் வேண்டுமோ!)

J K said...

அவர்கள் காதல் மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்கள்...

Anonymous said...

Kavithai is really nice..

If possible, can you post some photographs of Kollihills for us to enjoy..

-- Sekar, SG (now in singapore but from rasipuram)

J K said...

நன்றி திரு.சேகர்...

கூடிய விரைவில் புகைப்படம்(கொல்லிமலை)எடுத்து வந்து இங்கு இடுகிறேன்.